Sunday, October 27, 2013

பறவைகள் ஏன் அதிகாலையில் பாடுகின்றன?


ம்.. அவசரம் அவசரம்...
நான் பாடி முடிக்க வேண்டும்.
ஆம்.
மனிதர்கள் விழித்துக்கொண்டு விடுமுன்
நான் முடித்தாக வேண்டும்
இந்தக் காலைக் கச்சேரியை.
அவர்கள் விழித்துவிட்டால்
சந்தோஷமாய்ப் பாடும் என்னைக் கண்டு விட்டால்
உடனே என்னைத் தங்கள்
சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு.
ஆம்.
சந்தோஷமான எதையும் அவர்களுக்குச்
சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
சொந்தமாக்கிக் கொண்டுவிட்டபின்
எப்படி அதனிடம்
சந்தோஷம் இருக்க முடியும்
என்றறிய மாட்டார்.
 
( 02-04-1987 குமுதத்தில் வெளியான என் கவிதை )
<<<>>>

8 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை. நல்ல கவிதை.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை.

ரசித்தேன்....

த.ம. 5

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஹ்ம்ம்ம் உண்மைதான்...அருமையான கவிதை..வாழ்த்துக்கள்!

Anonymous said...

பச்சைக் கிளிகள் பறப்பது கண்டால் பருந்துக்குப் பிடிக்காது.
அருமை !

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சொந்தமாக்கிக் கொண்டுவிட்டபின் எப்படி அதனிடம் சந்தோஷம் இருக்க முடியும் என்றறிய மாட்டார்.//

சொந்தமாக்கிக் கொண்டபின் சுதந்திரம் பறிபோய் விடுமே ! அருமையான படைப்பு. பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//( 02-04-1987 குமுதத்தில் வெளியான என் கவிதை )//

வாழ்த்துகள். ;)

கீதமஞ்சரி said...

அட, இருபத்தாறு வருடங்களுக்கு முன் குமுதத்தில் வெளியான கவிதை. இன்றும் மனித மனத்தில் எந்த மாற்றமுமில்லை.

பறவையின் நிலையிலிருந்து மனிதர் பற்றிய அலசல் மனம் தொட்டது. பாராட்டுகள் ஜனா சார்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!