Monday, October 21, 2013

நல்லதாக நாலு வார்த்தை... 20

'அழுவதற்கு வாழ்க்கை
 நூறு காரணம் வழங்கினால்
வாழ்க்கைக்குக் காட்டுங்கள்,
புன்னகைக்க உங்களிடம்
ஆயிரம் காரணம் உண்டென்று.'
- Anonymous
('When life gives you a hundred reasons to cry

show life that you have a thousand reasons to smile.')
<> 

'சுடர்விடும் பொறுமையே
நம்பிக்கை.'

-Tertullian
('Hope is patience with the lamp lit.')
<> 


'சிறப்பான சாதனைகள்
சிறுசிறு செயல்களால்
செய்யப்பட்டவை.'

- Lao Tzu
('Great acts are made up of small deeds.')
 <>

'மதிப்பற்ற தினம்
என்றேதுமில்லை
எவர் வாழ்விலும்!'
- Alexander Woollcott
('There is no such thing in anyone's
life as an unimportant day.')
<> 

'எடுத்துக் கொண்டு விட்டதற்கு
இணையாகவேனும்
கொடுத்துவிடல் வேண்டும்
இவ்வுலகுக்கு
ஒவ்வொரு மனிதரும்.'
- Albert Einstein
('It is every man's obligation to put back into the
world at least the equivalent of what he takes out of it.')
<> 

'கவலை, நாளையின் துன்பத்தைக்
கவர்வதில்லை ஒருபோதும்;
இந்நாளின் பலத்தையே
இழக்கச் செய்கிறதது!'
- A.J.Cronin
('Worry never robs tomorrow of its sorrow;
it only saps today of its strength.')
<><><>

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாமே அருமை தான்.

முதலில் சொல்லியுள்ளது முத்தான முத்தல்லவோ !

பு ன் னை கை த் தே ன் ! ;)))))

பகிர்வுக்கு நன்றிகள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதொரு பொன்மொழிகள்....

பகிர்வுக்கு நன்றி

Rekha raghavan said...

நல்லதாக நாலு வார்த்தை ஏழும் அருமை. ஒன்றை ஒன்று விஞ்சிவிடுகின்றன தங்களின் அருமையான தமிழாக்கத்தில். பாராட்டுகள் பல.

ரேகா ராகவன்

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் மிகவும் அருமை... மிகவும் பிடித்தது...

Lao Tzu &
Tertullian

நன்றி... வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

'சுடர்விடும் பொறுமையே நம்பிக்கை.'

சுடர் விடும் வரிகள் அருமை..!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஒவ்வொன்றும் அருமை! பகிர்விற்கு நன்றி!

Anonymous said...

நல்லதா நாலு வார்த்தை அல்ல நாற்பது கூட சொல்லலாம்...ஒவ்வொன்றும் அருமை...

Anonymous said...

வணக்கம்
மனதை தொட்ட வரிகள்... அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

ஒவ்வொரு வார்த்தையும் அருமை

தி.தமிழ் இளங்கோ said...

பொன்மொழிகள் என்றாலே அனுபவ வார்த்தைகள். நீங்கள் தொடர்ந்து கொடுத்துவரும் அனைத்தும் சிந்தனைக்கு விருது.

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் தமிழாக்கம் மூலம் பல ஆங்கில மொழிகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!