Tuesday, August 20, 2013

நல்லதா நாலு வார்த்தை - 14


 

 

அனைத்து மனித 

விவேகத்தையும் 

அடக்கிவிடலாம்

இரண்டே வார்த்தையில்:-

நம்பு, காத்திரு.

- Alexander Dumas

(‘All human wisdom is summed up in two words; wait and hope.’)

<> 

மௌனம் எனும் தூக்கம்

ஊட்டுவது விவேகம்.

-Francis Bacon(‘Silence is the sleep that nourishes wisdom.’)

<> 

பெறும் உதவிகளால் அல்ல
பெறுவது நாம் நண்பர்களை;
புரியும் உதவிகளால்!
 
-Thycydides
(‘We secure our friends not by accepting
favours but by doing them.’)
 
<> 
 

நேற்றுப் படித்த பாடங்களுக்கு

நேர்மாறாக இருப்பினும் சரி

புதிய பாடங்களைக் கற்க

தயாராக இரு.

-Ellen DeGeneres

(‘Be open to learning new lessons even if they

contradict the lessons you learned yesterday.’)

<> 

இடர்ப்பாடுகளை சந்திக்காதவன் தன்

இயல் திறன் அறியாதவன்.

- Ben Jonson

(‘He knows not his own strength that hath

not met adversity.’)

<> 

இசைஎன்பது
உணர்வுகளின்
சுருக்கெழுத்து.
 
- Leo Tolstoy
(‘Music is the shorthand of emotion.’)
<> 
 

தன்னடக்கமுள்ள மனிதன்

பாராட்டப்படுகிறான்

மக்கள் அவனைப்பற்றிக்

கேள்விப்பட்டால்.’

-Ed Howe

A modest man is usually admired if people ever hear of him.’

<<<>>> 

 

(படம் - நன்றி:கூகிள்) 

 

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புரியும் உதவிகளால்...! - Thycydides

உண்மை... எனது அனுபவத்தில்...

Yaathoramani.blogspot.com said...

அருமையான பழமொழிகள்
அழகான மொழிபெயர்ப்பு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

நம்பு, காத்திரு.

அடங்கிப் போகிறது எல்லாமே இதற்குள்.

கலியபெருமாள் புதுச்சேரி said...

நன்மொழிகள் அனைத்தும் அருமை.

கோமதி அரசு said...

எல்லா பழமொழிகளும் நன்றாக இருக்கிறது.

கவியாழி said...

நாலும் நன்றே

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி. அனைத்தும் அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மொழிபெயர்ப்பு அருமை. பாராட்டுக்கள்.

உஷா அன்பரசு said...

// ‘தன்னடக்கமுள்ள மனிதன்
பாராட்டப்படுகிறான்
மக்கள் அவனைப்பற்றிக்
கேள்விப்பட்டால்.’// - நிஜம்தான்!
ஆரவாரங்களுக்குள் அமைதி உள்ளடங்கி தெரியாமலும் போகலாம்....

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!