Sunday, August 11, 2013

நல்லதா நாலு வார்த்தை -13


அறிவென்பது


அனுபவத்தின்


குழந்தை.


- Leonardo da Vinci


(‘Knowledge is the child of experience.’)


<> 


நாமல்லால் வேறாரும்

நமை இகழ முடியாது.

- Josh Billings

(‘No one can disgrace us but ourselves.’)


<> 

 


எல்லாவற்றுக்கும் அதன்


அழகுண்டு, ஆனால்

எல்லாரும் அதைக்

காண்பதில்லை


- Confucius


(‘Everything has its beauty, but not everyone sees it.’)


<> 


புதியவர்கள் என்போர்

புலரக் காத்திருக்கும்

நண்பர்களே!

- Rod McKuen

(‘Strangers are just friends waiting to happen.’)

<> 


விஞ்ஞானபூர்வமாக


பொருட்களை


பிரிக்கலாம் மூவகையாக:


வேலை செய்யாதன,


உடைந்து போவன,


தொலைந்து போவன.


-Russel Baker


(‘Objects can be classified scientifically into three major categories:


those that don‘t work, those that break down and those that get lost.’)


<> 


 


எப்படி அவர்கள்


மலர வேண்டியவர்களோ


அப்படி அவர்களை


நடத்துங்கள்.


எந்தஅளவு  அவர்களால்


பரிமளிக்க முடியுமோ


அந்த அளவு ஆவதற்கு


உதவியவர் ஆவீர்கள்!


– Goethe


(‘Treat people as if they were what they ought to be and


you help them to become what they are capable of being.’)


<> 


இன்றொரு தினம்


இரு நாளைக்கு இணை.


-Benjamin Franklin


(‘One today is worth two tomorrows.’)

 

<<<>>>

 

12 comments:

உஷா அன்பரசு said...

(‘Everything has its beauty, but not everyone sees it.’)
- பிடித்த வரிகள்...!

cheena (சீனா) said...

அன்பின் ஜனா - நல்ல பொன்மொழிகள் - கடைப்பிடிக்க வேண்டுமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை....

இராஜராஜேஸ்வரி said...

நாமல்லால் வேறாரும்
நமை இகழ முடியாது.’

பொருள் பொதிந்த அத்தனை வரிகளும் அருமை..!

Yaathoramani.blogspot.com said...

அருமையான மொழிகள்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

tha.ma 3

தி.தமிழ் இளங்கோ said...

நல்ல கருத்தாழம் மிக்க மேற்கோள்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

கோமதி அரசு said...

பொன்மொழிகள் பகிர்வு அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

ராமலக்ஷ்மி said...

/‘இன்றொரு தினம்


இரு ‘நாளை’க்கு இணை.’/

ஆகான்னு இருக்கு. தொடருங்கள்.

Unknown said...

All Sentence is Very beautifull.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!