உன் அன்பொரு அழகைச்
சுமந்து வரும்
என் அகக்கண் அதில்
குளிர்ந்து விடும்.
உன் முன்பொரு வாசம்
தவழ்ந்து வரும்
அதில் தனியொரு பாசம்
கமழ்ந்திருக்கும்.
நெற்றியிற் கேசம்
கலைந்து விழும்
நின்றதைப் பார்த்தால்
நெஞ்சம் கவிழும்.
சொற்களின் சிக்கனம்
தூண்டிவிடும்
கற்பனை என் முன்
பொங்கி எழும்.
உன் பாதம் தரையில்
நீந்தி வரும்
அது பாக்களை விரலில்
ஏந்தி வரும்.
கண்களில் காந்தம்
ஒளிந்திருக்கும்
காணுமுன்பாகவே
ஈர்த்துவிடும்.
திருப்திப் புன்னகை
உதடுகளில்
திகழ்ந்திருக்கும் நீ
சயனிக்கையில்.
உன் அசைவுகள் தென்றலை
வழிநடத்தும் அந்த
இசையினில் எனக்கு
மெய் மறக்கும்.
துன்பம் உன்னிடம்
துவண்டு விடும்
துணிவோ உன்னிடம்
கற்றுக் கொள்ளும்.
துணையெனும் வார்த்தை
தலை குனியும்
உனை அது முழுதும்
சொலப் போதாமல்!
<<<>>>
11 comments:
அழகான கவிதை.
ரேகா ராகவன்.
அழகான வரிகள்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் சார்.
துணையெனும் வார்த்தை
தலை குனியும்
உனை அது முழுதும்
சொலப் போதாமல்!//
துணையின் உயர்வை சொல்லும் கவிதை அருமை.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
//துணையெனும் வார்த்தை
தலை குனியும்
உனை அது முழுதும்
சொலப் போதாமல்!//
அருமை, அருமை! மனதைத் தொட்டுவிட்டன இவ்வரிகள்.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
சிறப்பான வரிகள். அழகிய கவிதை....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
உன் அசைவுகள் தென்றலை
வழிநடத்தும் அந்த
இசையினில் எனக்கு
மெய் மறக்கும்.
பாடல் முழுக்க இசை ஒலிக்கிறது இனிமையாய்
//உன் அசைவுகள் தென்றலை
வழிநடத்தும் அந்த
இசையினில் எனக்கு
மெய் மறக்கும்.//
ரொம்பவும் ரசித்துப் பாடிய கவிதை என்று நினைக்கிறேன்! வரிகளின் துள்ளல் சொல்கின்றன.
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்குக் காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்து விடு
- பாடல்: கண்ணதாசன் (படம்: இரவும் பகலும்)
எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
அன்பின் ஜனா
அருமையான கவிதை
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com
நல்லதொரு கவிதை. ;) பாராட்டுக்கள்.
ச்வீட்டான கவிதை :)
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!