தண்ணீரில்
முகம் பார்க்க
நேரமிருக்கா எறும்புக்கு?
தன்
அழகை தான் ரசிக்க
மனசிருக்கா
தாமரைக்கு?
தான்
தொட்டதை தழுவிக்கொள்ள
தயங்கிடுதாகுதாணங்களில்ுமே மனம் தண்ணீரும்?
வான்
விட்டதை தரைக்குத் தர
ஏன்
என்கிறதா மழை?
எங்கிருந்தோ
வீசும் தென்றல்
இடைநிற்க
யோசிக்குதா?
எழில்சொட்ட
மலரும் பூக்கள்
எதையேனும்
யாசிக்குதா?
<<<>>>
14 comments:
பதில் சொல்லத்தான் முடியுமா?
த ங் க ள் கே ள் வி க ளு க் கு!
ஸ்தம்பிக்க வைக்கும் நிமிடங்கள். ;)))))
அழகான வரிகள். அருமையான கவிதை.
தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன் சார்.
வியக்கவைக்கும் வித்தியாசமான சிந்தனை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 2
மிக அழகாய் கவிதை.. வரிக்கு வரி ரசித்தேன்..
ரசிக்க, யோசிக்க வைக்கும் கேள்விகள்...
tm3
மிகவும் ரசனைக்குரிய வரிகள். பகிர்வுக்கு நன்ரி
விளக்கமில்லா வினாக்கள் தான்...
பிரதிபலன் என்பதை
சற்றும் யோசிக்காது
பலனளிப்பவை ஆயிரமாயிரம்...
அழகான கருத்தும் கவிதையும் ...
இயற்கையின் பேரழகு வியத்தற்குரிதே. 'தன்னை
வியத்தல்' நம் போல் இவற்றுக்கில்லை!
நல்ல சிந்திக்க வைக்கும் கேள்விகள்.
இயற்கை நாம் அனுபவிக்கவே என்றாலும் அதை பாது காப்பது நம் கடமை.
/// என்னை அவ்வப்போது உற்சாகப்படுத்தி எழுத வைத்து விடுகிற கே.பி. ஜனா ஸார் (கதை, கவிதை, கட்டுரை என்று கலக்கல் பதிவர் இவர்) ///
(http://blogintamil.blogspot.in/2012/11/blog-
post_545.html)
வாழ்த்துக்கள்... நன்றி...
மனம் கவர்ந்த கவிதை
அன்பின் ஜனா - கவிதை அருமை - பலனை எதிர்பாராமல் செயல் புரியும் இவைகள எல்லாம் நாம் பின்பற்ற வேண்டியவைகள். நலல சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
எறும்பு,தாமரை,தண்ணீர்,மழை.பூக்கள் - எல்லாமே அழகு உங்கள் கவிதை வரிகளில்.
ரேகா ராகவன்
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!