Monday, September 17, 2012

அவர்களின் ப்ராஜெக்ட்கள்..



அன்புடன் ஒரு நிமிடம் -16

அவர்களின் ப்ராஜெக்ட்கள்..

சே! இவங்களை எப்படி திருத்தறதுன்னே தெரியலே! சலித்துக் கொண்டான் அபிஜித். கூப்பிடு தூரத்தில் தாத்தா.

என்ன விஷயம்? அவனாக சொல்லட்டும் என்று காத்திருந்தார்.  

கொஞ்ச நேரம் நடை பயின்றவன் அவர் கேட்கிற மாதிரி தோன்றாததால் தாத்தா, என்றழைத்து அந்த வாக்கியத்தை மறுபடி சொன்னான்.

வேறு வழியில்லை. விஷயத்தை சொல்லு, அவங்களை எப்படித் திருத்தறதுன்னு நான் சொல்லித் தர்றேன்,” என்றார் சாத்வீகன்.

ஸ்கூல்ல எனக்கு பிராஜெக்ட் வர்க் கொடுத்திருக்காங்க. நம்ம வீட்டில யாருமே எனக்கு உதவ மாட்டேங்கறாங்க!

த்சொ, த்சொ...என்றார்

ஆமா. யாருமே! ஒரு ப்ராஜெக்ட்னா என்னன்னு... அதோட வேல்யூவே  அவங்களுக்கு தெரியலே.

சரி, நீ சொல்லு. ப்ராஜெக்ட்னா என்னா?”

உங்களுக்குத் தெரியாதாக்கும்?”

எனக்கென்னப்பா தெரியும்? நான் படிக்கிற காலத்திலே ஹோம்வர்க் தான் உண்டு. இது ஏதோ புது விஷயம், நல்ல விஷயம் போல இருக்கு. இப்படியெல்லாம் கிடையாது அப்ப..

அவன் இன்ட்ரஸ்டிங்காக உட்கார்ந்தான். பிராஜெக்ட் அப்படீன்னா தீர்வு காண வேண்டிய ஒரு பிரசினை அல்லது நிறைவேற்ற வேண்டிய நோக்கம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டியது. அதை செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டியது. அப்புறம் அதை ஸ்டெப் பை ஸ்டெப்பாக அடுக்கிக்கொண்டு செய்து முடிக்க வேண்டியது... இப்படி சொல்லலாம்

, இதான் அதுவா? எல்லா விஷயத்துக்குமே பொருந்தற மாதிரி இருக்கே?”

ஆமா. நம்மை சுத்தி இருக்கிற எதையுமே இப்படித் சரி செய்யலாம். இன் ஃபாக்ட் இந்த மாதிரி பிராஜெக்ட் நாங்க செய்ய செய்ய எங்களுக்கு அந்தத் திறமை வரும், வளருமாக்கும்!

புரியுது. யு ரிக்வைர் எ நம்பர் அஃப் தெம். ஆனா ஸ்கூல்ல கொடுத்த ஒன்றுக்குக் கூட இவங்க உதவ மாட்டேங்கறாங்க, இல்லையா?”

எக்ஸாட்லி.

எனக்கொரு சந்தேகம்.

தாத்தா?”

போன வாரம் உங்கப்பாம்மா இந்த பழைய வீட்டில வாஷிங் மெஷின்லேயிருந்து இண்டக்ஷன் ஸ்டவ் வரைக்கும் மாடர்ன் காட்ஜட்ஸ் எதையும் சரியா பிளேஸ் பண்ண முடியலே, எப்படி இதை மாடிஃபை பண்றதுன்னு மண்டையை உடைச்சிட்டிருந்தாங்களே, அதை எடுத்துக்கிட்டா அது கூட ஒரு ப்ராஜெக்ட் தான் இல்லையா?”

நிச்சயமா.”

ஏன், நம்ம வீட்டில் முன்னாலிருக்கிற பத்துக்குப் பத்து ஏரியாவில ஒரு குட்டித் தோட்டம் அமைக்க முடிஞ்சா காய்கறிச்செடிகளை இயற்கை உரம் போட்டு நல்லபடியா வளர்க்கலாம்கிறதும்...

ஒரு ப்ராஜெக்ட் தான்.

அப்புறம் இந்த எலிகளோட உபத்திரவத்தை போக்க மட்டும் ஒரு வழி கிடைச்சுட்டா?”

அது கூட ஒண்ணு தான்!

அப்படீன்னா இதில எதையாவது ஒண்ணையோ, இல்லை ரெண்டையோ எடுத்து அதை நீ பண்ணினா உனக்கு ப்ராஜெக்ட் அனுபவமும் கிடைக்கும், நம்ம வீட்டில சில பிரசினையும் தீரும் இல்லையா?”

ஆமா, நல்ல ஐடியா நீங்க சொல்றது!

அட்லீஸ்ட் அந்த ப்ராஜெக்டை எல்லாம் செய்திட்டிருக்கிற அவங்க, நீ அதுக்கு உதவலேன்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணாம இருக்கிறாங்களே, அதுவே பெரிய உதவிதானே உன் ப்ராஜெக்டை முடிக்கிறதிலே?”

அவன் உற்சாகமாக எழுந்தான். இதை முடிச்சிட்டு அதில உதவப் போறேன் தாத்தா!

குட் லக் சொல்வதற்குள் ஆளைக் காணோம்!

('அமுதம்' ஆகஸ்ட் 2012 இதழில்)

<<>>


13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

Mr. K B ஜனா அவர்களின், இந்த
”அவர்களின் ப்ராஜெக்ட்” கதையே
ஒரு சிறந்த ப்ராஜெக்ட் தானே! ;)

ப்ராஜெக்ட் வொர்க் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாதுன்னு சொன்ன தாத்தா என்ன போடு போடுகிறார்!

சபாஷ்! மிகச்சிறந்த படைப்பு. மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துக்கள்.

VGK

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“பிராஜெக்ட் அப்படீன்னா தீர்வு காண வேண்டிய ஒரு பிரசினை அல்லது நிறைவேற்ற வேண்டிய நோக்கம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டியது. அதை செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டியது. அப்புறம் அதை ஸ்டெப் பை ஸ்டெப்பாக அடுக்கிக்கொண்டு செய்து முடிக்க வேண்டியது... இப்படி சொல்லலாம்”//

//“ஏன், நம்ம வீட்டில் முன்னாலிருக்கிற பத்துக்குப் பத்து ஏரியாவில ஒரு குட்டித் தோட்டம் அமைக்க முடிஞ்சா காய்கறிச்செடிகளை இயற்கை உரம் போட்டு நல்லபடியா வளர்க்கலாம்கிறதும்... ஒரு ப்ராஜெக்ட் தானே.”

அருமை வெகு அருமையான எளிமையான உதாரணம். ;)))))

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தானோ...? அருமை... நல்ல பகிர்வு... நன்றி...

தி.தமிழ் இளங்கோ said...

ஒரு வீட்டில்தான் எத்தனை திட்டமிடுதல்கள். உங்களின் இந்த சிறுகதை, வாழ்க்கையே ஒரு திட்டமிடுதல்தான் என்று சொல்லுகிறது.

Rekha raghavan said...

ப்ராஜெக்ட் பற்றி விளக்கியது மாதிரியும் ஆச்சு, அப்படியே அவனை வீட்டு வேலைகளில் பங்கேற்க விருப்பப்பட வச்சது மாதிரியும் ஆச்சு. அருமை.

ரேகா ராகவன்.

Yaathoramani.blogspot.com said...

அருமை
மிகப் பெரிய விஷயத்தை
மிக மிக எளிதாகச் சொல்லிப்போகும்
தங்கள் பாணி உள்ளம் கவர்ந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

கோமதி அரசு said...

குட் லக் உங்களுக்கு.
குழந்தைகளின் உதவும் மன்பான்மையை வளர்க்க அருமையான ப்ராஜெக்ட்.

ஸ்வர்ணரேக்கா said...

//கம்ப்ளெய்ண்ட் பண்ணாம இருக்கிறாங்களே, அதுவே பெரிய உதவிதானே//

--- உண்மை உண்மை...

நிலாமகள் said...

எல்லா விஷயத்துக்குமே பொருந்தற மாதிரி //

எதிலுமிருக்கு ஒரு ந‌ன்மை!

வெங்கட் நாகராஜ் said...

வாழ்க்கையே ஒரு ப்ராஜெக்ட்....

சிறப்பான கட்டுரை....

ADHI VENKAT said...

அருமையான கதை. வீட்டு பிரச்சனைகளும் முடியும். பேரனின் பிராஜெக்ட்டும் முடியும். தாத்தா சூப்பர் தாத்தா...

ரிஷபன் said...

ஒரு ப்ராஜக்டில் ரெண்டு மாங்காய் :)

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!