Tuesday, September 11, 2012

வசதி


டுத்து வைத்த சாவி அதற்குள்  

எங்கே மறைந்து போனது?

மனசில் உதித்த கவிதை வரி

மாயமாகிப் போனது.

அடுத்த நிமிடமே எதுவும் 

அப்படியே மறந்து போகுது.

வயதானதால் வரும் மறதி

வந்து தினம் விளையாடுது.

அதிலும் சௌகர்யம் இருக்குது 

அடிக்கடி எழும் கவலைகளும் 

அடுத்த நொடி மறந்து போகுது.

<<<>>>

(படம்: நன்றி, கூகுள்)


15 comments:

வெங்கட் நாகராஜ் said...

மறப்பதிலும் ஒரு நன்மை இருக்குது!

அதானே... கவலைகளை மறப்போம்...

நல்ல கவிதை....

ராமலக்ஷ்மி said...

/அடிக்கடி எழும் கவலைகளும்

அடுத்த நொடி மறந்து போகுது./

மறதியில் இப்படியும் ஒரு வசதி:). அருமை.

Rekha raghavan said...

//அடிக்கடி எழும் கவலைகளும்
அடுத்த நொடி மறந்து போகுது.//

ஆனால் இந்த கவிதை மட்டும் எந்நாளும் எனக்கு மறக்காது. எடுத்துக் கொண்ட கருத்து, சொல்லிய விதம்,ஆஹா ...அருமை.


ரேகா ராகவன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மறதி என்பது கடவுள் அளித்த மாபெரும் கிஃப்ட் என்றே சொல்ல வேண்டும்.

சிலரின் பிரிவுகளும் இழப்புக்களும் நம் நெஞ்சை விட்டு அகலாமல் நீண்ட நாட்கள் வாட்டி வருகின்றன. ஒரு சில உறவுகள் மட்டுமின்றி நெருங்கிய நட்புகளும் கூடவே.

நாளடைவில் தான் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை மறந்து நம்மால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடிகிறது. அந்த மறதி மட்டும் இல்லாவிட்டால் தினமும் நாம் துயரித்திலேயே அல்லவா இருக்க நேரிடும்.

ஆனால் சிலர் மட்டும், அவசியமாக நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டியவற்றையே அன்றாடம் மறந்துவிட்டு, தேவையில்லாத மறக்க வேண்டிய விஷயங்களை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறார்கள். இதுவும் எதார்த்த வாழ்க்கையில் மிகவும் சிரமமே.

எதற்கெடுத்தாலும், சிலர் இப்போது செல்போனில் ரிமைண்டர் போட்டு வைத்துக்கொள்கிறார்கள்.

நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

கவலைக்கு சரியான மருந்து
மறதிதான்
சொல்லிப்போனவிதம் அருமை
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 3

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்...

மனிதனுக்கு மறதி மிகச் சிறந்த மருந்து... (என் பதிவுகளிலும் சொல்லி உள்ளேன்...) மறதி இல்லையென்றால் இந்த நவீன உலகில் மனித குலமே நாசமாய் போய் இருக்கும்...

cheena (சீனா) said...

அன்பின் ஜனா

இம்மறதி எனக்கும் உள்ளது - நினைத்த சிந்தனை உடனே மறந்து போகிறது - 15 / 40 நிமிடங்கள் கழித்து மறுபடியும் மனதில் வந்து ஊஞ்சலாடுகிறது. இதுவும் ஒரு வகையில் நல்லது தான் என விட்டு விட்டேன். கவிதை அருமை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

நிலாமகள் said...

குறையிலும் இருக்கு ஒரு நிறை!

ரிஷபன் said...

அடிக்கடி எழும் கவலைகளும்

அடுத்த நொடி மறந்து போகுது.

மறதி மிகப் பெரும் வசதி

கீதமஞ்சரி said...

மறதி போற்றும் இக்கவிதையை மறக்காமல் நினைவில் கொள்ளவேண்டும். நல்லதொரு கருத்துடனான கவிதைக்குப் பாராட்டுகள்.

தி.தமிழ் இளங்கோ said...

// வயதானதால் வரும் மறதி
வந்து தினம் விளையாடுது.
அதிலும் சௌகர்யம் இருக்குது
அடிக்கடி எழும் கவலைகளும்
அடுத்த நொடி மறந்து போகுது. //

அருமையான வரிகள்! என்ன செய்வது? அதிக வயதோடு வாழ்கிறோம் என்று இருக்கும் யாரும் இதிலிருந்து தப்ப முடியாது.


ADHI VENKAT said...

மறப்பதிலும் இப்படி ஒரு வசதியா....நல்லது தான்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...


super kavithai

புதுவை சந்திரஹரி said...

marathi vattukirathu - unmaithan-
kavalaikal maraya marukkirathe.

- all aged men will like this poem
because they face the problems. good
- Chandrahari -

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!