''என்னங்க இது ரொம்ப நல்ல இடம், நல்ல மனுஷங்கன்னு இந்த இடத்திலே போய் நம்ம பொண்ணுக்கு பேசி முடிச்சீங்களே, இப்ப கார், பணம்னு ஒண்ணொண்ணா கறக்கிறாங்களே?'' எல்லா வருத்தத்தையும் கணவரிடம் கொட்டினாள் கோமதி.
ராகவனுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ''தரகர் சொன்னதை நம்பி நானும் ஏமாந்துட்டேன் கோமு. ரொம்ப படிச்சவங்க, விசால இதயம் கொண்டவங்க... அப்படி இப்படின்னு அடுக்கினார். ஆஹா நம்ம அபிதாவோட ராசி, ஒரு அருமையான சம்பந்தம் அமைஞ்சிருக்குன்னு நினைச்சிட்டேன்.''
''ரிடயராகிற நேரத்திலே நம்ம ஒரே பொண்ணுக்கு கல்யாணம்! கையிலே கிடைக்கிற தொகை முழுசும் அதுக்கே போயிடும் போல இருக்கு!''
கல்யாணத்துக்கு முன் தினம் பணத்தையும் கார் சாவியையும் எடுத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்குள் நுழைந்தார்கள் ராகவன் தம்பதி. கொடுத்து விட்டு, ''அவ்வளவு தானே?'' என்றார் பவ்யமாக.
''இன்னும் ஒரே ஒரு விஷயம் நீங்க செய்ய வேண்டியது பாக்கி இருக்கு சம்பந்தி.... இந்தப் பணத்தை உங்க பேரில் பாங்கில் டெபாசிட் பண்ணி மாசா மாசம் வட்டி வர்ற மாதிரி பண்ணிடுங்க. இந்தக் காரை உங்க வீட்டுக்கு ஓட்டிட்டுப் போயிடுங்க. தாம் தூம்னு செலவு பண்ணி பொண்ணு கல்யாணத்தை நடத்திட்டு அப்புறம் கஷ்டப்படற எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கேன். அந்த நிலைமை உங்களுக்கு வரக் கூடாதுன்னு தான் இப்படிச் சொன்னேன்.''
நெகிழ்ந்து போனார்கள் அந்த அக்கறையில்!
('குமுதம்' 13-07-2005 இதழில் வெளியானது.)
11 comments:
நல்ல சம்பந்தி.
கதை அருமை.
நல்ல கருத்துள்ள கதை. குமுதத்தில் வந்ததுக்கு வாழ்த்துகள். அதை எங்க எல்லாருடனும் பகிர்ந்து கொண்டதற்கு சந்தோஷம்.
நல்ல சம்பந்தி.
நல்ல கதை. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என நினைக்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
குமுதம் இதழில் வெளியானதுக்கு வாழ்த்துக்கள்.
மிக அருமையான சம்பந்தி தான் (என்னைப்போலவே).
குமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.
இப்படிப்பட்ட சம்பந்திகளும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனதுக்கு நெகிழ்வாக இருக்கிறது.
குமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள் சார்.
Sathyarajkumar srkmail@gmail.com
said:
Sweat twist. Kudos.
// நெகிழ்ந்து போனார்கள் அந்த அக்கறையில்!//
கதையை படித்துவிட்டு நானும். அருமையான கருத்து.
அந்த சம்பந்தி அட்ரஸ் தர முடியுமா?
சிறப்பான சிறுகதை!
நல்ல சிறுகதை... இப்படியும் சில நல்லோர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதில் ஒரு நிம்மதி.....
ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
அந்த சம்பந்தி அட்ரஸ் தர முடியுமா?
Repeatttu !!!!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!