Tuesday, August 16, 2011

எனினும்..



னினும் மீதமிருக்கிறது தன்னம்பிக்கை
அது எழ வைக்கிறது.


எனினும் ஆழ் மனதில்  அன்பிருக்கிறது
அது மறக்க  வைக்கிறது.
 

எனினும் அனுபவ அறிவிருக்கிறது
அது  துவளாதிருக்க செய்கிறது.
 

எனினும் சில நேரம் மழை பெய்கிறது
அது மனதைக் குளிர வைக்கிறது.
 

எனினும் அலைகடல் இசையிருக்கிறது.
அது மகிழ்ச்சி அளிக்கிறது.


'எனினும்' - அந்த வார்த்தையில் என் 
உலகிருக்கிறது!



13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

எனினும் தங்களின் இந்தப்பதிவும் வழக்கம்போல் மிகவும் அருமையாகவே உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை.

“எனினும் மீதமிருக்கிறது தன்னம்பிக்கை
அது எழ வைக்கிறது.”

சிந்தனை செய்ய வைத்த வரிகள்.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.

Rekha raghavan said...

//எனினும் ஆழ் மனதில் அன்பிருக்கிறது
அது மறக்க வைக்கிறது.//

உண்மை.உலகமே இதில்தானே சுழன்றுகொண்டிருக்கிறது. ஆழ்ந்த சிந்தனை வரிகள் . மொத்தத்தில் அருமையான கவிதை.

குறையொன்றுமில்லை. said...

எனினும் உங்க வார்த்தைகள் எல்லாமே நல்லா இருக்கு.

RVS said...

//எனினும் அலைகடல் இசையிருக்கிறது.
அது மகிழ்ச்சி அளிக்கிறது. //

அலைகடல் இசை!!! நல்ல சிந்தனை... :-)

ADHI VENKAT said...

நல்ல கவிதை. அருமையான வரிகள்.

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் ஜனா. என் பதிவிர்க்கு வந்து கருத்து சொன்னதர்க்கு நன்றி.
உங்க கவிதை மிகவும் அருமை.

மனோ சாமிநாதன் said...

அனைத்து வரிகளும் அருமை! நல்லதொரு கவிதை!

ரிஷபன் said...

எனினும் ஆழ் மனதில் அன்பிருக்கிறது
அது மறக்க வைக்கிறது.

அருமை.. அன்பு மட்டும் இல்லாவிட்டால் வாழ்வில் ஏது சுவாரசியம்.

Yaathoramani.blogspot.com said...

எனினும் என்கிற ஒரு வார்த்தைக்கு
உபயோகிப்பவர்கள் உபயோகித்தால்தான்
எத்தனை உரமிருக்கு
எத்தனை உயிரிருக்கு
அருமையான பதிவு
அழகான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

கே. பி. ஜனா... said...

dear kbjana
ENINUM -fantastic poem best wishes
mala uths

G.M Balasubramaniam said...

எனினும் உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

Unknown said...

'எனினும்' - அந்த வார்த்தையில் என்
உலகிருக்கிறது!

'எனினும் 'எனினும் என்றேதான்-நீர்
எழுதிய கவிதை நன்றேதான்
இனியும் இதுபோல் எழுதுங்கள்-தினம்
இனிக்க சுவைக்க தாருங்கள்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!