Friday, June 17, 2011

அமைதி.. சிலிர்ப்பு..

அமைதி 
வேறெதுவும் வேண்டாம் போல் 
தோன்றுகிற மாலை 
வெறுமே என் உள்ளத்தை 
வைத்திருக்கும் வேளை
தானெதுவும் சொல்லாது 
தழுவுமொரு அமைதி 
எதையோ என்னிடம் 
வேண்டி நிற்கிறது.


சிலிர்ப்பு 


சிதறிக் கிடக்கும்
சம்பங்கி மலர்கள்
ஒன்றின் மேல் கூட 
பட்டு விடாமல்
சைக்கிளை ஓட்டிச்
சென்றதில் நேர்ந்த
தடுமாற்றம்
அதில் வென்றதும்
சிலிர்க்க வைத்தது.

10 comments:

ADHI VENKAT said...

அமைதியையும், சிலிர்ப்பையும் உணர்ந்தோம் உங்கள் வரிகளில்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தானெதுவும் சொல்லாது
தழுவுமொரு அமைதி //

//நேர்ந்த தடுமாற்றம்
அதில் வென்றதும் - சிலிர்ப்பு //

அமைதியாக மிகவும் ரசித்தேன்,
சிலிர்ப்பு அடைந்தேன்.

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இரண்டுமே நல்ல கவிதைகள்.... இரண்டாவது கொண்ட முயற்சியின் வெற்றிக் களிப்பினை அழகாய் உணர்த்தியது.....

ரிஷபன் said...

தானெதுவும் சொல்லாது
தழுவுமொரு அமைதி

சொல்லாமல் சொல்லும் வேளை

ராமலக்ஷ்மி said...

சிலிர்க்க வைத்தது எமையும் சிலிர்ப்பு.

அருமையான ‘அமைதி’.

நன்றி.

Rekha raghavan said...

இரண்டும் அருமையான கவிதைகள். ரசித்தேன்.

குமரி எஸ். நீலகண்டன் said...

கவிதைகள் அருமை... தொடரட்டும் இடுகைகள்

Yaathoramani.blogspot.com said...

அந்த அமைதி தங்களிடம் ஒரு அருமையான
கவிதையைத்தான் வேண்டி நிற்கிறது
அதைத்தான் தந்துவிட்டீர்களே
மலர் மனம் கொண்ட கவிஞர்களால்
மலரை துயர்கொள்ளச் செய்ய முடியுமா
அதனால்தான் அந்த வெற்றியில் அந்தச் சிலிர்ப்பு
படமும் பதிவும் அருமை தொடர வாழ்த்துக்கள்

RVS said...

சம்பங்கி மிதிபடாமல் ஓட்டியது நிஜமான சிலிர்ப்புதான்!! ;-))

குணசேகரன்... said...

இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.
உங்களின் ஒவ்வொரு கவிதையும் நைஸ்.பகிர்தலுக்கு நன்றி.
where is Follower button?i wish to add me. but it is not displaying..
http://zenguna.blogspot.com/

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!