Monday, June 6, 2011

இணைந்து நின்று...

''என்ன  வசந்த்?'' என்று நோக்கினார் திருவேங்கடம். எம்.டி. ''சொல்லு.''
''இசட் கம்பெனிக்கு நாம் அனுப்பின என்ட்ரியை நிராகரிச்சிட்டாங்க.''
''ஓஹோ? இம்ப்ரூவ் பண்ணித் தரச் சொல்றாங்களா?''
''வரதன் அட் கம்பெனியோட கான்செப்டை தேர்ந்தெடுத்துட்டாங்க.''
''அட, நிஜமாவா?'' முகத்தில் ஆச்சரியம் காட்டினார்.
''ஆமா சார், எத்தனை பாடுபட்டுத் தயாரிச்சு அனுப்பினது?''
''ஆமாமா,'' என்றார் திரு உணர்ச்சியை முகத்தில் கொட்டியபடி, ''எனக்குத் தெரியாதா என்ன? காபி ரைட்டர் வினித் முதலில் ஒரு டிசைன் போட்டுக் கொடுத்தான். அது சரியில்லே, வேறே போட்டுட்டு வான்னு அனுப்பினே.  அப்புறம் வரிசையா அவன் கொடுத்த மூணுமே போதுமான  திருப்தி தரலே உனக்கு. அப்பால கதிர்வேலைப் போடச்  சொன்னே. அந்த நாலுமே தேறலே. பிறகு ரங்கா போட்டுத் தந்த மூன்றில் கடைசியா ஒன்றை ஓகே செய்வதற்குள் எத்தனை சிரமம் எடுத்துக் கொண்டாய் நீ?''
''அப்படியிருந்தும் அந்த ஆட்கள் -- நேத்து முளைச்ச விளம்பர கம்பெனி -- ஆர்டரைக் கவ்விட்டுப் போயிட்டாங்களே சார்?''
''அது எப்படின்னு ஆச்சரியப்படறே இல்லே?''
''ரொம்ப பாஸ்! ஏதோ லக் தான்.''
''இதுலே ஆச்சரியப்பட ஏதுமில்லே வசந்த். அவர்களோட வொர்கிங் பாட்டர்ன் எப்படின்னு விசாரித்தேன். சீஃபிலிருந்து காபி ரைட்டர் வரை எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து ஒவ்வொரு கான்செப்டாக டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு அம்சமா விருத்தி செய்து எல்லாருடைய பெஸ்டும்  வர்ற மாதிரி ஒரு அட்  தயாரிக்கிறாங்க. உங்களை மாதிரி தனித்தனியா உட்கார்ந்து ஒவ்வொன்றிலும் விமரிசனப் பார்வையை ஓட விடாமல் டீம் வொர்க் செய்யறாங்க. அதான் நம்மை தோற்கடிச்சிட்டாங்க. இனிமேலாவது...?''
''புரிகிறது சார்,'' என்றான் வசந்த்.

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

என்றுமே கூட்டமைப்பு தான் சரியாக வரும் என்று புரிய வைத்த கதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எந்த ஒரு சிறிய வேலையாக இருப்பினும், டீம் ஒர்க் ஆக அனைவரும் அமர்ந்து, விவாதித்து, ஒருமித்த கருத்துக்கு வந்து, மனப்பூர்வமாக முழு ஒத்துழைப்பை நல்கினால் மட்டுமே வெற்றி கிட்டிடும் என்பதை இந்தச்சிறுகதை மிக அழகாக விளக்குகிறது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

இராஜராஜேஸ்வரி said...

டீம் வொர்க் செய்யறாங்க. அதான் நம்மை தோற்கடிச்சிட்டாங்க. இனிமேலாவது...?''
''புரிகிறது சார்,'' என்றான் வசந்த்.
உபயோகமான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

கோவை2தில்லி said...

கூட்டணியின் மகத்துவத்தை விளக்கும் நல்லதொரு கதை.வாழ்த்துக்கள் சார்.

அப்பாவி தங்கமணி said...

டீம் வொர்க் பத்தி நல்ல ஒரு கதை...

RVS said...

ஒற்றுமையே உயர்வுக்கு வழி. ;-)

ரிஷபன் said...

பின்னிட்டீங்க.. படத்திலும்.. கதையிலும்.

கே. பி. ஜனா... said...

SRK (Satyarajkumar) said
நீங்கள் எழுதிய பல கதைகள் அறிவுரைகள் சொன்னாலும் கதைக்கான மெல்லிய ஆச்சரியத்தோடு அழகாக இருந்தன. இருப்பினும் இந்த ஒரு பக்கக் கதையில் கதையின் வடிவமில்லை.

இப்படி இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம்:

''என்ன வசந்த்?'' என்று நோக்கினார் திருவேங்கடம். எம்.டி. ''சொல்லு.''
''இசட் கம்பெனிக்கு நாம் அனுப்பின என்ட்ரியை நிராகரிச்சிட்டாங்க.''
''ஓஹோ? இம்ப்ரூவ் பண்ணித் தரச் சொல்றாங்களா?''
''வரதன் அட் கம்பெனியோட கான்செப்டை தேர்ந்தெடுத்துட்டாங்க.''
''அட, நிஜமாவா?'' முகத்தில் ஆச்சரியம் காட்டினார்.
''ஆமா சார், எத்தனை பாடுபட்டுத் தயாரிச்சு அனுப்பினது?''
''ஆமாமா,'' என்றார் திரு உணர்ச்சியை முகத்தில் கொட்டியபடி, ''எனக்குத் தெரியாதா என்ன? காபி ரைட்டர் வினித் முதலில் ஒரு டிசைன் போட்டுக் கொடுத்தான். அது சரியில்லே, வேறே போட்டுட்டு வான்னு அனுப்பினே. அப்புறம் வரிசையா அவன் கொடுத்த மூணுமே போதுமான திருப்தி தரலே உனக்கு. அப்பால கதிர்வேலைப் போடச் சொன்னே. அந்த நாலுமே தேறலே. பிறகு ரங்கா போட்டுத் தந்த மூன்றில் கடைசியா ஒன்றை ஓகே செய்வதற்குள் எத்தனை சிரமம் எடுத்துக் கொண்டாய் நீ?''
''அப்படியிருந்தும் அந்த ஆட்கள் -- நேத்து முளைச்ச விளம்பர கம்பெனி -- ஆர்டரைக் கவ்விட்டுப் போயிட்டாங்களே சார்?''
''அது எப்படின்னு ஆச்சரியப்படறே இல்லே?''

''ரொம்ப பாஸ்! ஏதோ லக் தான்.''

"நேத்து முளைச்சதா நீங்க நினைக்கும் வரதன் ஆட் கம்பெனி சமீபத்தில் நான் வாங்கினதுதான். வார இறுதிகளில் அதே வினித், கதிர்வேல், ரங்கா மூணு பேரையும் சேர்ந்து உட்கார்ந்து ஒவ்வொரு கான்செப்டாக டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு அம்சமா விருத்தி செய்து எல்லாருடைய பெஸ்டும் வர்ற மாதிரி ஒரு அட் தயாரிச்சு அனுப்பச் சொன்னேன். பெரிய கம்பெனியோ, நேத்து முளைச்ச சின்ன கம்பெனியோ, உங்களை மாதிரி தனித்தனியா உட்கார்ந்து ஒவ்வொன்றிலும் விமரிசனப் பார்வையை ஓட விடாமல் டீம் வொர்க் செஞ்சாதான் ஒர்க் அவுட் ஆகும்ன்னு..."

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!