Wednesday, May 18, 2011

கனவு வீடு


ந்தக் கிராமத்துக்கே பெருமை சேர்த்துக் கம்பீரமாய் எழும்பியிருந்தது அந்த வீடு.

''என்ன பரமசிவம், உங்க பையன் போட்டிருக்கிற வீடு பிரமாதமா இருக்கே?'' கேட்டார்  நண்பர் மாதவன்.

''ஆமாங்க, சின்னப் பிள்ளையா இருக்கிறப்ப அடிக்கடி சொல்லுவான், 'நான் வளர்ந்து பெரிய ஆளானதும் நம்ம ஊரில் பிரம்மாண்டமா ஒரு வீடு கட்டுவேன்'னு. இப்ப கட்டிட்டான்,'' என்றார் சிரித்தபடி.

''சென்னைக்குப் போய் பிரபல  டைரக்டர் ஆனபிறகு உங்களைக் கண்டுக்கலேன்னு வருத்தப் படுவீங்களே அடிக்கடி, இப்ப நம்ம ஊர் தேடி வந்திருக்கிறான் உங்க பையன்.  இனி எல்லாம் சரியாயிரும்.''

''உங்க வாக்கு பலிக்கட்டும்!'' என்றார் பரமசிவம்.

டுத்த மாதம்.

ஷூட்டிங் முடிந்ததும் வீடு செட்டைப் பிரித்துச் சென்றனர் படக் குழுவினர்.

ஏதோ கொஞ்ச நாளாவது மகனைப் பார்க்க முடிந்ததே என்று திருப்திப் பட்டுக்கொண்டார் அவர்.

/\/\/\/\/\

(குமுதம் 14-01-2009 இதழில் வெளியானது)

13 comments:

vasu balaji said...

very nice:)

RVS said...

Excellent! ;-)

பனித்துளி சங்கர் said...

பகிர்ந்தமைக்கு நன்றி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்லா இருக்கு .

ரிஷபன் said...

Unexpected end!
As usual KBJ touch!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா! கடைசியில் இதுவும் செட்-அப் செய்த வீடு தானா? வழக்கம்போல நல்ல ட்விஸ்டு கொடுத்து அசத்திட்டீங்க, சார். குமுதத்தில் வெளிவந்ததற்கும் சேர்த்து பாராட்டுக்கள். அன்புடன் vgk

Chitra said...

நல்லா இருக்குது. குமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!

குமரி எஸ். நீலகண்டன் said...

வழக்கம் போல் உங்கள் கை வண்ணத்தில் கருத்தாழ மிக்க நல்ல கதை...

எம் அப்துல் காதர் said...

nice :-))

ராமலக்ஷ்மி said...

கனவு வீடு, ஆறுதல் தந்த ஒரு கனவாகவே..

முடித்த விதம் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

கனவு வீடு – எப்பொழுதும் போலவே உங்கள் கைவண்ணத்தில் அழகிய கதையாய் மாறி இருக்கிறது கே.பி.ஜே சார். பகிர்ந்தமைக்கு நன்றி.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

very nice

ADHI VENKAT said...

எதிர்பாராத முடிவு சார். குமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!