Friday, October 15, 2010

உதிர்ந்திடும் மந்திரம்...



யதின் சுருக்கங்களுக்குப் பின்னே

வாழ்வின் பெருக்கங்கள்

வாழ்ந்ததற்கு அடையாளமாய்..


தெருவில் எறியப்படுகின்ற

தேய்ந்த எந்திரங்கள்.

படித்து முடித்துவிட்ட

பாடப் புத்தகங்கள்.


வனித்துக் கொள்ள மட்டுமே நாங்கள்

கவனிக்கப்பட அல்ல.

வீசப்படும் வார்த்தைகளுக்கு வலிக்காமல்

தழுவி எடுத்துக்கொள்ளப்

பழகிவிட்டோம்.


விடைகள் கிடைக்காத உள்ளத்தை

உடையாமல் கொண்டு செல்ல

நடையின் வேகம் குறைந்தோம்.


முதிர்ந்ததும் உதிர்ந்துவிடும்

மந்திரம் தெரியவில்லை.
முடியாதவற்றிலிருந்து ஒதுங்கும்

இங்கிதமும் அறியவில்லை.

சுமந்து எம்மை மறு நாளில்
கொண்டு சேர்க்க முடியாமல்

தள்ளாடும் நாட்கள்...


நிஜ விழுதுகளில் ஊஞ்சலாடியதொரு

காலம்...இன்று

நினைவுகளையே விழுதாய் ஊன்றி

நிற்கிறோம் நாங்கள்.


னவலியின் அழுத்தத்தில்

உடல்வலி மறக்கிறோம்.

உடல் வலியின் உக்கிரத்தில்

மனமிருப்பதையே மறக்கிறோம்...


(அவள் விகடன் 27-08-2010 இதழில் பிரசுரம்)



9 comments:

சிவராம்குமார் said...

சூப்பர் ஜனா!

Rekha raghavan said...

//கவனித்துக் கொள்ள மட்டுமே நாங்கள்
கவனிக்கப்பட அல்ல.
வீசப்படும் வார்த்தைகளுக்கு வலிக்காமல்
தழுவி எடுத்துக்கொள்ளப்
பழகிவிட்டோம் //


அருமையான கவிதை. தாய் தந்தையரை கவனிக்காமல் விடுபவர்களுக்கு மேற்கண்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டையடி. அவள் விகடனில் பிரசுரமானதுக்கு வாழ்த்துகள்.

ரேகா ராகவன்.

Anonymous said...

அருமை ஜனா!
வாழ்த்துக்களும்! :)

Chitra said...

நிஜ விழுதுகளில் ஊஞ்சலாடியதொரு

காலம்...இன்று

நினைவுகளையே விழுதாய் ஊன்றி

நிற்கிறோம் நாங்கள்.


......மனதை தொட்ட வரிகள்..... அருமையான கவிதை.
அவள் விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!

vasan said...

/மனவலியின் அழுத்தத்தில்
உடல்வலி மறக்கிறோம்.
உடல் வலியின் உக்கிரத்தில்
மனமிருப்பதையே மறக்கிறோம்.../
What a words!!
The pain of the, neglected, rejected aged will be the curse to the Nation. Zoo- Where People come to see the animals. Orphanage - Where the animals come to see the GODS.

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் சார்.என்னை கவர்ந்த வரிகள்>>>


மனவலியின் அழுத்தத்தில்

உடல்வலி மறக்கிறோம்.

உடல் வலியின் உக்கிரத்தில்

மனமிருப்பதையே மறக்கிறோம்..>>>

தூள்

ரிஷபன் said...

நிஜ விழுதுகளில் ஊஞ்சலாடியதொரு
காலம்...இன்று
நினைவுகளையே விழுதாய் ஊன்றி
நிற்கிறோம் நாங்கள்.

அர்த்தமுள்ள கவிதை.. வாழ்வின் அர்த்தம் சொல்லும் கவிதை

ADHI VENKAT said...

அவள் விகடனில் வாசித்தேன். வாழ்த்துக்கள்.

நிலாமகள் said...

உயிர் உருக்கும் வரிகள்... இன்றைய குருத்துகளும் நாளை பழுக்க வேண்டியிருக்கும் என்பதை ஒரு கணமாவது சிந்தையில் நிறுத்தினால் ஆட்டம் மட்டுப்படும். அவள் விகடன் தரமாகவே தேர்ந்திருக்கிறது. வாழ்த்துகள்!!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!