Monday, March 13, 2023

என்ன ஒரு குரல்!

குரலில் ஒரு ஸ்டைல்! ஸ்டைலில் ஒரு குரல்!

பாடிய மொழிகளை அடுக்குவதைவிட, எல்லா மொழிகளிலும் பாடியிருக்கிறார் என்று சொல்லிவிடலாம் சுருக்கமாக.
ஷ்ரேயா... அரே யார்! என்னமா ஒரு குரல்!
SHREYA GOSHAL... மார்ச் 12.
பிறந்தநாள்!
தன் சரிகமப.. வை முதலில் பாடி அவார்ட் வாங்க்கியது Zee TV -யின். 'சரிகமப' ரியலிடி ஷோவில். அந்தப் பட்டுக் குரல் இயக்குநர் Sanjay Leela Bhansali யின் காதில் பட்டு 'தேவதாஸ்' படத்தில் சேர்க்கப் பட்டு.. அந்த 'Bhaire Piyaa… ’Dola Re..’ உதடு குவித்துப் பாடிய பாடல்கள் நேஷனல் அவார்ட், ஃபில்ம்ஃபேர் அவார்ட், ஃபில்ம்ஃபேர் ஆர்.டி. பர்மன் அவார்ட் என்று அவார்டுகளைக் குவித்தன.


ஆல்பம் (கார்த்திக்ராஜா) படத்தில் தன் செல்லக் குரலில் 'செல்லமே செல்லம்...' என்று வந்தார் தமிழில். அப்புறம் எதையென்று சொல்ல? ' உன்னைவிட......'(ஒன்னை விட..?) என்று மத்திய ஸ்தாயியில் இழுப்பாரே கமலஹாசனுடன் 'விருமாண்டி'யில்? பிறகு பிதாமகனில் வீசிய 'இளங்காற்று..' ஆனால் எனக்குப் பிடித்த பாடல் என்னவோ "எனக்குப் பிடித்த பாடல்..."தான். ஜூலீ கணபதி'யில் ஜெய்ராம் காரை ஓட்டிக்கொண்டு மலைச் சரிவில் விரைகையில் டேஷ் போர்டில் ஒலிக்குமே அது! என்ன ஒரு நச் குரல்!அதற்கு முன் சில்லென்று ஒரு காதலில் சில்லென்று ஒரு பாடல்: 'முன்பே வா என் அன்பே வா...' (ரஹ்மான்). 'சின்னக் கண்ணிலே..' (தோனி - இளையராஜா) பாடலை வேறு யார் அத்தனை வீச்சுடன் பாட முடியும்!
அமிதாப் நடித்த Cheeni Kum படத்தில் (இளையராஜா) அந்த 'Jaane Do Na…' வை வளைத்து வளைத்து பாடும் லாவகமே தனி. நாலு வயசிலேயே சங்கீதம் படிக்க ஆரம்பிச்சவராச்சே?
இசையை தன் ஆக்ஸிஜன் என்னும் இவர் லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்ட ஒரே பாடகர். பெங்காலி உட்பட எல்லா மொழி பாடலையும் உச்சரிப்பைக் குறிக்க உதவியாக இருக்கும் என்று இந்தியில் எழுதி பாடுவாராம்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் அனைத்தும் நன்று. எத்தனை பாடல்கள்...... அனைத்தும் ரசிக்கும் விதமாக..... தொடரட்டும் உங்கள் தகவல் தொகுப்பு.

Thulasidharan V Thillaiakathu said...

எனக்கு ஷ்ரேயா கோஷல் அவர்களின் குரல் ரொம்பப் பிடிக்கும். பாடல்களை ரசிப்பதுண்டு அருமையான பாடகி. தகவல்களும் சிறப்பு.

கீதா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!