Saturday, September 19, 2015

அவள்... (கவிதைகள்)

176
வாழ்க்கைக் கதை
இடைவேளயில்
சரியான திருப்பம்-
நம் சந்திப்பு!

177
ஒரு நிமிடமே
ஆயிற்று உனக்கு எனை ஆள.
ஒரு யுகம் ஆனாலும்
விருப்பமில்லை எனக்கு மீள.

178
சொல்லிவிடு,
உன் கண்ணுடன் பேசுவதா
உன்னுடனா என்று.
முடியவில்லை ஒரே நேரத்தில்!

179
ஒவ்வொரு பூவாகக்
கேட்டுப் பார்த்தேன்
உன்னுடன் போட்டிக்கு
வர மறுக்கிறது.


180
புதுமைக்கு
புதுமையைக்
கற்றுக் கொடுத்தவள்…

181
போகிறேன் என்கிறாய்
நீ.
இருக்கிறேன் என்கிறது
கண்.

182
பக்கத்தில் நீ இருக்கையில்
இன்னிசை கேட்பதில்லை.
இன்னொரு சொர்க்கம் எதற்கு?

><><><
(படம் - நன்றி: கூகிள்)

5 comments:

கோமதி அரசு said...

கவிதைகள் எல்லாம் அருமை.

மனோ சாமிநாதன் said...

//ஒரு நிமிடமே

ஆயிற்று உனக்கு எனை ஆள.

ஒரு யுகம் ஆனாலும்

விருப்பமில்லை எனக்கு மீள.//

மிக அழகு!

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு நிமிடமே
ஆயிற்று உனக்கு எனை ஆள.
ஒரு யுகம் ஆனாலும்
விருப்பமில்லை எனக்கு மீள.
அருமை நண்பரே அருமை
தம +1

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை......

”தளிர் சுரேஷ்” said...

178
சொல்லிவிடு,
உன் கண்ணுடன் பேசுவதா
உன்னுடனா என்று.
முடியவில்லை ஒரே நேரத்தில்! // இந்த கவிதை மிகவும் கவர்ந்தது! அனைத்தும் சிறப்பு! நன்றி!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!