Friday, October 31, 2014

நல்லதா நாலு வார்த்தை....38


மெதுவாகவே நட. 
உன்னிடம்தான் 
வந்து சேரவேண்டும் 
நீ.’
- Proverb
(‘Walk slowly. All you can ever 
come to is yourself.’)
<> 
எந்த இரு மனிதரும் 
படிப்பதில்லை
ஒரே புத்தகத்தை.'
- Edmund Wilson
(‘No two persons ever read 
the same book.’)
<> 
எதையும் அடைய மிக விரும்பும் முன்,
எத்தனை மகிழ்வுடன் இருக்கிறார் 
அதனை அடைந்தவர் தற்போது
என்பதை பார்க்க வேண்டும் கவனமாக.’
- La Rouchefoucauld
(‘Before strongly desiring anything we should look 
carefully into the happiness of its present owner.’)
<> 
சேவை செய்வதெப்படியென 
சென்று கண்டு கொண்டவர்களே 
நின்று மகிழ்வர் நிஜத்தில் 
என்றறிவேன் நான்.’
- Albert Schweitzer
(‘One thing I know: the ones among you 
who will be really happy are those who will 
have sought and found how to serve.’)
<> 
நம் அறியாமையின் எல்லையை 
அறிந்து கொள்ள மட்டுமே 
அளவற்ற அறிவு தேவைப்படுகிறது.’
- Thomas Sowell
(‘It takes considerable knowledge just 
to realize the extent of your own ignorance.’
<> 
வெற்றியின் இலக்கணம் சற்றே எளிது:
உங்களின் சிறந்ததைச் செய்திடுக,
உலகோர் விரும்பலாம் அதை.’ 
Sam Ewing
(‘Success has a simple formula: do your best, 
and people may like it.’)
<> 
விரும்பும் போதெல்லாம்
திரும்ப நினையுங்கள்,
இனிய நினைவுகள் ஒருபோதும்
இற்றுப் போவதில்லை.’
- Libbie Fudim
(‘Recall it as often as you wish, a 
happy memory never wears out.’)

>>>0<<<

(படம்- நன்றி; கூகிள்)

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை. மிகவும் பிடித்தது இரண்டே இரண்டு:

‘நம் அறியாமையின் எல்லையை அறிந்து கொள்ள மட்டுமே
அளவற்ற அறிவு தேவைப்படுகிறது.’

‘விரும்பும் போதெல்லாம் திரும்ப நினையுங்கள்,
இனிய நினைவுகள் ஒருபோதும் இற்றுப் போவதில்லை.’

பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK

இராஜராஜேஸ்வரி said...

நல்லதாக மலர்ந்த இனிய வார்த்தைகள் அருமை.பாராட்டுக்கள்.!

சுப்ரா said...

எட்டுத்திக்கும் தேடி இட்டிருக்கும் கருத்துகள் அருமை . - சுப்ரா .

கரந்தை ஜெயக்குமார் said...

//‘மெதுவாகவே நட.
உன்னிடம்தான்
வந்து சேரவேண்டும்
நீ.’///
அற்புதம் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை....

த.ம. +1

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!