Wednesday, October 22, 2014

அவள் - 10



59
அதைவிட அழகிய மலரை
அகிலத்தில் பார்த்ததில்லை: 
உன் மனம்.

60
ஒரே படகில்
பயணிக்கிறோம்
மூன்று பேரும்:
நீ, நான், என் கவிதை.

61
நேர்ந்த யோகம்
வாழ்வில் ஒன்று:
உன்னைக் கண்டது..

62
நதியில் புது வெள்ளம்
நடந்து வந்தாற்போல்
நீ.

63
அடிக்கடி வந்துன்னைத்
தழுவி
தன்னைக்
குளுமையாக்கிக் கொள்கிறது
தென்றல்.

64
யாரும் பற்ற முடியாது
இரும்புக் கோட்டைக்குள்
இருக்கிறது பத்திரமாக
என் மீதான
உன் அன்பு.

65
உன் சிரிப்பில்
புறப்பட்டு மேலெழுந்து
என் விழியில் வந்திறங்கும்
தானியங்கி விமானம்.

>>><<<
(படம்- நன்றி: கூகிள்)

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

’அவள்’ பற்றி அழகான அசத்தலான அற்புத வரிகள். பாராட்டுகள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

///ஒரே படகில்
பயணிக்கிறோம்
மூன்று பேரும்:
நீ, நான், என் கவிதை.///
அருமை நண்பரே
நன்றி
தீபாவளி நல் வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

கோமதி அரசு said...

யாரும் பற்ற முடியாது
இரும்புக் கோட்டைக்குள்
இருக்கிறது பத்திரமாக
என் மீதான
உன் அன்பு.//

அழகான வரிகள்.
வாழ்த்துக்கள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இரசிக்கவைக்கும்வரிகள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மனோ சாமிநாதன் said...

'அவளை'ப்பற்றி அருமையான வரிகள்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

தி.தமிழ் இளங்கோ said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ரிஷபன் said...

உன் சிரிப்பில்
புறப்பட்டு மேலெழுந்து
என் விழியில் வந்திறங்கும்
தானியங்கி விமானம்.


தொகுப்பு கொண்டு வரலாமே

வெங்கட் நாகராஜ் said...

அவள் கவிதைகள் அனைத்துமே ரசித்தேன்......

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

/நதியில் புது வெள்ளம்
நடந்து வந்தாற்போல்/ கவித்துளிகளும்! அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!