Friday, August 29, 2014

அதுவும் இனிமை...



னிமையைப் போக்குகின்றன எண்ணங்கள்.
எண்ணங்கள் சூழ நான் 
அமர்ந்திருக்கும்போது
எந்த இடமும் தெரிவதில்லை தனிமையாக.
கவலைக் கிரணங்களை அவை 
கொண்டிருந்தாலும் அதன் 
திவலைகளை அள்ளித் தெளித்தபடியே என்
தனிமையை விசிறுகின்றன.
பெரும் தீயாக எழும் துக்கமும்
அடங்கிப் போகிறது ஒரு கட்டத்தில்.
என் எண்ணங்களுடன் நான்
பேசுகிறேன்.
எங்கிருந்தாவது எடுத்து ஓர்
இனிமைச் சாயம் அவற்றின் மேல்
பூச முயலுகிறேன்.
ஏதோ ஒரு பாட்டை அவை முணுமுணுக்க
எப்படியோ தெளிந்து போகிறேன்.

>0<


(படம்- நன்றி:கூகிள்)

6 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
அழகிய கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை.

வெங்கட் நாகராஜ் said...

அருமை.......

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கவலைக் கிரணங்களை அவை
கொண்டிருந்தாலும் அதன்
திவலைகளை அள்ளித் தெளித்தபடியே என்
தனிமையை விசிறுகின்றன.

பெரும் தீயாக எழும் துக்கமும்
அடங்கிப் போகிறது ஒரு கட்டத்தில்.

என் எண்ணங்களுடன் நான்
பேசுகிறேன்.//

மிகவும் ரஸித்துப்படித்தேன் ..... இந்த வரிகளை ..... மீண்டும் .... மீண்டும்.

அதுவும் இனிமை.... யாகவே இருந்தன.

பாராட்டுக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

தம 3

ரிஷபன் said...

எங்கிருந்தாவது எடுத்து ஓர்
இனிமைச் சாயம் அவற்றின் மேல்
பூச முயலுகிறேன். // அருமை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!