Friday, April 25, 2014

தலைப்பு



'என்னங்க, மலர்ச்சரம் பத்திரிகையிலிருந்து உங்ககிட்டே ஒரு தலைப்புக் கொடுத்து கட்டுரை எழுதித்தரக் கேட்டாங்களே, எழுதி முடிச்சிட்டீங்களா?'' கேட்டாள் சுமதி, பிரபல புள்ளி பராங்குசத்தின் மனைவி.


''அதைத்தான் நாலு நாளா யாரைப்பத்தி எழுதறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன். யாருமே ஞாபகம் வரமாட்டேங்கறாங்க..'' தலையைச் சொறிந்து கொண்டார்.

அவளும் யோசித்தாள்.


''ஏங்க, நம்ம ராமசாமியைப்பத்தி எழுதுங்களேன்.''


''ராமசாமியா, யார் அது?'' அவருக்கு நினைவில்லை.


''அதுதாங்க, உங்ககூட காலேஜில ஒண்ணாப் படிச்சதா சொல்வீங்களே?''


''அவனா? அவன் அப்புறம் என்ன ஆனான்?'' யோசித்தார்.


''ஏதோ சமூக சேவை நிறுவனத்தில் செயலாளரா இருக்கிறதா சொன்னாரே, ஒரு முறை?'' என்றவள் அவர் எப்பவோ எழுதிய ஒரு கடிதத்தைத் தேடி எடுத்துக் கொடுத்தாள்.


''ஒ, அப்ப ஜமாய்ச்சுரலாம்,'' என்றவர் உட்கார்ந்து ரெண்டு பக்கம் எழுதி, தலைப்பை மேலே எழுதினார்:


'என்னால் மறக்க முடியாத நபர்.'


('குமுதம்' 04-06-2008 இதழில் வெளியானது)

<<<>>>
(படம்- நன்றி: கூகிள்)

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'என்னால் மறக்க முடியாத நபர்.' //

மிகவும் அருமையான [பொருத்தமான] தலைப்பு தான். ;)

//('குமுதம்' 04-06-2008 இதழில் வெளியானது)//

பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

ஹாஹா! அருமை!

இராஜராஜேஸ்வரி said...

நினைவிலேயே நில்லாமல் மறந்து போன
நண்பரைப்பற்றியமறக்கமுடியாத நினைவுகள்.. !

விந்தைதான் குடியேறுகிறது சிந்தையில்..!!

ராமலக்ஷ்மி said...

நல்ல தலைப்பு:))!

இடைவெளிகள் said...

அசத்தல்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்...

கீதமஞ்சரி said...

நினைவில் இல்லாதவரும் மறக்க முடியாத நபராகிவிடுவது காலத்தின் கோலம். அருமையான கதை. பாராட்டுகள் ஜனா சார்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தலைப்பு.... :))))

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!