Sunday, April 20, 2014

நல்லதா நாலு வார்த்தை... 29


 
'என்ன நேர்கிறது உங்களுக்கு
என்பது பத்து சதவிகிதம்
எப்படி அதை நீங்கள்
எதிர்கொள்கிறீர்கள்
என்பது தொண்ணூறு சதவிகிதம்
என்றானது வாழ்க்கை.'
-Charles Swindoll
('Life is 10% what happens to you
and 90% how you react to it.')
<>

'நகைச்சுவை,
மனித இனத்தின்
வரப்பிரசாதம்.'
- Mark Twain
('Humour is mankind's greatest blessing.')
<>

'தனக்கு வெளியே
வாழ முடியும்போது
ஒரு மனிதன்
வாழத் தொடங்குகிறான்.'
-Albert Einstein
('A person starts to live when he can
live outside himself.')

'உண்மையான எந்த உணர்வும்
அனிச்சையானது.'
-Mark Twain
('Any emotion, if it is sincere, is involuntary.'
<>

'மகிழ்வாயிருப்பதாக ஒருவன்
மனதில் நினைத்தால்,
அதுவே போதும்
மகிழ்வாயிருக்க!'
- Madame de La Fayette
('If one thinks that one is happy,
that is enough to be happy.')

<>

'கலை தெரிந்துகொள்கிறது,
வாழ்க்கை அறிவைப் பிரயோகிக்கிறது;
கலை உணர்கிறது,
வாழ்க்கை செயலாற்றுகிறது.'
-Austin O'Malley
('Art knows, life applies knowledge; art feels, life acts.')
<>
 
'இலக்கிலிருந்து கண்களை
எடுக்கும்போது மட்டுமே
காண்கிறீர்கள் நீங்கள்
அச்சுறுத்தும் தடைகளை!'
- Henry Ford
('Obstacles are those frightful things you
see when you take your eyes off your goal.')
<<<<>>>>
(படம் - நன்றி : கூகிள்)

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதில் நினைப்பதும், வரப்பிரசாதமும் மிகவும் பிடித்தது...

இராஜராஜேஸ்வரி said...

'இலக்கிலிருந்து கண்களை
எடுக்கும்போது மட்டுமே
காண்கிறீர்கள் நீங்கள்
அச்சுறுத்தும் தடைகளை!'

தடையின்றி தவழும் வரிகள் அழகு..!

ராமலக்ஷ்மி said...

எப்படி எதிர் கொள்கிறோம்? அவசியம் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய ஒன்று. அனைத்து பொன் மொழிகளும் தமிழாக்கமும் நன்று. பகிர்வுகள் தொடரட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

கடைசியில் உள்ளது பிடித்ததில் முதல் இடத்தில்.....

நல்ல பகிர்வு.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!