Sunday, September 14, 2025

வெற்றிகரமான...


தர்மேந்திரா, ஹேமமாலினி, ராஜ்குமார், கமலஹாசன், சுனில் தத், ராஜ்கிரன், பிரான்....இத்தனை பேரும் ஒரே படத்தில் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? படம்: ‘ராஜ் திலக்' டைரக்டர்: ராஜ்குமார் கோஹ்லி. ஆம், multi starrer expert.
Rajkumar Kohli…. இன்று பிறந்தநாள்!
’நீரும் நெருப்பும்' ஹிந்திப் பதிப்புடன் ஆரம்பித்தார். அந்த இரட்டையர் வேடங்களில் நடித்தவர் ராஜேந்திர குமார். ‘Kora Aur Kala’. எம்.கே. ராதா நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்' கதை அது. Alexander Dumas எழுதிய ‘The Corsican Brothers’ நாவலைத் தழுவியது.
Jaani Dushman எடுத்துக்கொள்ளுங்கள் ஜிதேந்திரா, சஞ்சீவ் குமார், சுனில் தத், சத்ருகன் சின்ஹா, வினோத் மெஹ்ரா, ரேகா, ரீனா ராய், நீடு சிங்… சூபர்ஹிட்!
சுனில்தத், பெரோஸ் கான், ஜிதேந்திரா, வினோத் மெஹ்ரா, ரேகா, மும்தாஜ்…என்று நட்சத்திரங்களை அழைத்து வந்த வெற்றிப் படம் ‘Naagin’ தமிழிலும் வந்தது. ‘நீயா?’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!