Saturday, September 27, 2025

வாழ்க்கை எளிதானது..


‘உண்மையிலேயே மகிழ்வோடும் மன நிறைவோடும் இருக்கவேண்டுமானால் மகிழ்வுக்கும் மனநிறைவுக்கும் அர்த்தம் தேடிக் கொண்டிருக்கக் கூடாது.’
சொன்னவர் Confucius... நம் பல கன்ஃப்யூஷன்களைத் தகர்த்தவர்...
இன்று பிறந்தநாள்!
இன்னும்…
‘வாழ்க்கை உண்மையில் எளிதானது, ஆனால் அதை சிக்கலாக்கிக் கொள்வதென்று அடம் பிடிக்கிறோம்.’
‘வீழாதிருப்பதில் அல்ல நம் மகிமை, வீழும்போதெல்லாம் எழுவதில்.’
‘எத்தனை மெதுவாக நகருகிறாய் என்பது முக்கியமல்ல, நீ நிற்காத வரையில்.’
‘துயருற வேண்டியதுதான், ஆனால் மூழ்கி விடக்கூடாது அதன் அழுத்தத்தில்.’
‘எங்கே நீ சென்றாலும் எல்லா உன் இதயத்தோடும் செல்.’
‘தன்னை வெற்றி கொள்பவனே தலைசிறந்த படைவீரன்.’
‘எல்லாவற்றுக்கும் ஒரு அழகு உண்டு, ஆனால் எல்லோரும் அதை பார்ப்பதில்லை.’
‘நீ நேசிக்கும் ஒரு வேலையை தேர்ந்தெடு. உன் வாழ்க்கையில் ஒரு நாளும் வேலை செய்ய வேண்டியிருக்காது.’
‘மூன்று விதங்களில் நாம் விவேகம் அடையலாம் 1. சிந்தித்து, அது உயர்வானது. 2. மற்றவரைப் பார்த்து. அது எளிதானது. 3. அனுபவத்தால். அதுதான் கசப்பானது.’
‘மனிதன்தான் சத்தியத்தை மேன்மையுறச் செய்ய வேண்டும்; சத்தியம் மனிதனை அல்ல.’
‘மௌனம்: ஒருபோதும் வஞ்சிக்காத உண்மையான நண்பன்.’
‘தீங்கிழைக்கப்படுவது ஒன்றுமேயில்லை, நீங்கள் அதை நினைக்காத வரையில்.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!