‘Farz’ என்ற இந்திப் படத்தில் நாகேஷ் ஒரே ஒரு காட்சியில் வருவார் கௌரவ நடிகராக. அதேபோல் இவர் ‘அஞ்சல் பெட்டி 520’ படத்தில் ஒரே ஒரு ஷாட் வருவார். சிவாஜியும் நாகேஷும் அந்த பெரிய ஹோட்டலில் நுழையும்போது வெளியே வருவார் இவர். Apparently drunk. எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் ஒரு விநாடி விழிப்பார். பாக்கெட்டிலிருந்து காசு எடுத்து சுண்டிப் பார்த்து வலதுபக்கம் போவார்.
எட்டுப் பிள்ளைகளில் ஒருவரான இவர் எட்டிய சிகரம் மிக உயரம். சின்ன அசோக் குமாராக ‘Kismet’ -இல் அறிமுகமாகி… சின்ன வில்லனாக 'C.I.D.' -யில் அனைவரும் அறியும் முகமாகி…
“Hum Kala Hain To…” பாடல்! ‘Gumnaam’ இல் அந்த அட்டகாச ஆட்டம்! உடன் ஆடும் ஹெலன் உருப்படியாக ஆடினாலும் உற்றுப் பார்த்ததென்னவோ அத்தனை கண்ணும் இவரைத்தான். இடுப்பை ட்யூனிங் ஃபோர்க்காக உதறுவதும் உடம்பை 45 டிகிரி இடவலம் நெ
ளிப்பதும் தோள்களை வெடுக் வெடுக்கென்று உதறுவதும்… மிகப் பாப்புலரான 10 இந்திப் பாடலை பட்டியலிட்டால் வந்துவிடும் இது அதில். எந்த அளவுக்கு ரசிகர் மத்தியில் பிரபலம் என்றால் ஷம்மிகபூரின் ‘Brahmachari’ படத்தில் Junior Mehmood அதுபோலவே பனியன் அணிந்து கொண்டு இந்த முழுப் பாட்டுக்கும் அவரை மாதிரியே ஆட, தியேட்டர் அதிரும்.
ளிப்பதும் தோள்களை வெடுக் வெடுக்கென்று உதறுவதும்… மிகப் பாப்புலரான 10 இந்திப் பாடலை பட்டியலிட்டால் வந்துவிடும் இது அதில். எந்த அளவுக்கு ரசிகர் மத்தியில் பிரபலம் என்றால் ஷம்மிகபூரின் ‘Brahmachari’ படத்தில் Junior Mehmood அதுபோலவே பனியன் அணிந்து கொண்டு இந்த முழுப் பாட்டுக்கும் அவரை மாதிரியே ஆட, தியேட்டர் அதிரும்.
‘அடுத்த வீட்டுப் பெண்'ணை இந்தியில் இவர் ஜாயின்டாகத் தயாரித்த போது முதல் & இரண்டாவது காமெடி பாத்திரங்களை (டி.ஆர்.ராமச்சந்திரன், தங்கவேலு) சுனிலுக்கும் கிஷோர் குமாருக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பாத்திரமான பாட்டு வாத்தியார் பக்கிரி சாமியின் வேடத்தைத்தான் எடுத்துக் கொண்டார் தனக்கு. தன் அனாயாச நடிப்பால் அதை முதல் பாத்திரம் ஆக்கியிருப்பார்.
இவர் இல்லையானால் நாகேஷ் படங்களை அங்கே செய்ய ஆளில்லை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு நகைச்சுவையிலும் குணச்சித்திரத்திலும் புகுந்து விளையாடும் நடிகர்! ‘நான்', 'கா. நேரமில்லை’ என்று நாகேஷ் படமெல்லாம் அங்கே இவர்தான். ரெண்டுக்கும் இவருக்கு Filmfare அவார்ட்! ஓம் பிரகாஷுக்கு அந்த கதை சொல்லும் காட்சியில் அதேபோலக் கலக்கி கைதட்டலை வாங்கியிருப்பார்.
ரொம்பவும் அனுபவித்து நடித்திருப்பார் ‘அனுபவி ராஜா அனுபவி’ இந்தியில். ‘முத்துக்குளிக்க வாரீயளா..’ என்று முதல் வரியை தமிழிலேயே பாடிக்கொண்டு ரமா பிரபாவுடன் ஆடுவது நினைவுக்கு வருமே?
காமெடியன் மட்டுமல்ல, திறமையான டைரக்டரும்கூட! ரொம்பவே நிரூபித்தது ‘Kunwara Baap’ படத்தில். “Main Hoon Ghoda Yeh Hai Gaadi…” என்று பாடிக் கொண்டே வரும் முதல் காட்சியிலேயே அசத்தியிருப்பார். குணசித்திர நடிகரும்கூட என்பதை மனோரமாவுக்கு முக்கிய பாத்திரம் கொடுத்திருந்த அந்தப் படத்தின் கடைசி காட்சிகளில் காட்டியிருப்பார்.
‘Kaajal’ படத்தில் கலக்கலான ரோல். கட்டை பிரம்மச்சாரியாக்கும் நான் என்று சொல்லிக் கொண்டு கர்லாக் கட்டையை எடுக்க வருவார், கதவுக்கு வெளியே நின்றுகொண்டு மும்தாஜ் ஒரு துணியைக் கிழிக்க, வேட்டி கிழிஞ்சிட்டதாகத் தடுமாறுவதும் டம்ப் பெல்ஸை ஆட்டும்போது மும்தாஜ் சலங்கையைக் குலுக்க திகைப்பதும்….
பிரபல I S Johar இவருடன் சேர்ந்து நடித்த ‘Johar Mehmood in Goa’ ஜோராய் ஓடவே, தொடர்ந்தனர் அந்த சிரீஸை.
‘மதறாஸ் டு பாண்டிச்சேரி’யை இந்தியில் N.C. Sippyயுடன் தயாரித்தபோது அப்போதுதான் அறிமுகமான அமிதாப் பச்சனை அதில் கதாநாயகனாக நடிக்கவைத்தபோதே சொன்னார், அவர் அமோகமாக வருவார் என்று.
ரெண்டு மிகப் பெரிய இசையமைப்பாளர்களை அறிமுகப் படுத்திய பெருமையும் உண்டு இவருக்கு. யார் யார்? ஆர். டி. பர்மன்.( 'Chote Nawab’) ராஜேஷ் ரோஷன் (‘Kunwara Baap’)
செமத்தியான அந்த ‘எதிர்நீச்சல்’ நாகேஷ் ரோலை இந்தியில் செய்த ‘Lakhon Mein Ek’ படத்தில்தான் ஆர்.டி.பர்மனின் அந்தப் பிரபல “-Chanda O Chanda…” பாடலைப் பாடினார் கிஷோர் இவருக்காக. அங்கேயும் இங்கேயும் பிரபலமான பாடலாயிற்றே? ‘Main Sundar Hun’ இல் ‘சர்வர் சுந்தரத்’தை சுந்தரமாக….
முதல் முதலாக megaphone -ஐ எடுத்த ‘Bhoot Bangla’ -வில் ஹரரையும் காமெடியையும் கரெக்ட் டோஸில் மிக்ஸ் பண்ணி கொடுத்தார். அள்ளிக் கொண்டு போனது. ஆர்மோனியத்தை இயக்கிய ஆர்.டி.பர்மனை நடிக்கவும் அழைத்துக் கொண்டார். ரெண்டு பேருமாக பேய் பங்களாவில் கிலிகிலிக்க சுற்றிவருவது ஜோர் என்றால் கிஷோர் இவருக்காக பாடிய அந்த முதல் பாடல், “உறக்கத்தில் இருப்பவர்களே விழியுங்கள், என் கதையைக் கேளுங்கள்….” (Jagon Sonewale… ) கனஜோர்! (அதில் ஒரு வரி: “நல்லவனுக்கு ஏன் எப்பவுமே கெட்ட பேர் இந்த உலகத்தில், புரியலையே?”)
சரியாகக் கவனிக்கப்படாமல் போய்விட்ட, இவர் டைரக்ட் செய்த அந்த காமெடி ‘Ek Baap Chhe Bete’ நாலு பிள்ளைகளுக்கு தகப்பன் அந்த நடிகர். பெண்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்ததைப் பொறுக்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொள்ள... இன்னொருத்தியை மணந்து இன்னும் இரண்டு பிள்ளைகள் அவருடன். அவளும் இவர் flirtings -ஐப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆக்ஸிடெண்டில் உயிரை விட.. இப்போது ஆறு குழந்தைகளுடன் வேறூர் வந்து விவசாய வாழ்க்கைல் இறங்கி… அங்கேயும் பெண் மருத்துவர் ஒருவரைப் பார்த்துக் கிறங்கி நிற்கையில் ஒரு நிற்க போடுகிறான் அந்தப் பெண்ணின் மகளைக் காதலிக்கும் அவர் பையன்! ஹிலாரியஸ் காமெடி!
ஒரு கட்டத்தில் கதாநாயகர்களை விட அதிக தேடல் இருந்தது இவர் கால்ஷீட்களுக்கு. ஹாண்ட்சம் ஆக்டர்! காமெடியனாகியிராவிட்டால் ஹீரோவாக பல ரவுண்டு வந்திருப்பார் இந்த மீனா குமாரியின் மைத்துனர். அப்பா மும்தாஜ் அலி பெரிய நடிகர், டான்ஸர் கூட. சகோதரி மினு மும்தாஜ் காமெடி நடிகை.
எடுத்த சில படங்கள் மிகுந்த சமூக அக்கறையுடன் கூடியவை.
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!