Wednesday, January 29, 2020

சொல்ல ஆரம்பித்த கதை..


சற்றே பேச்சு திக்குகிறது என்பதால் தங்கு தடையின்றிப் பேச வசதியாக குழந்தைகளுடனேயே கூடுதல் நேரம் செலவிட்டான் அந்த வாலிபன். அதனால் அவர்களுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தான். அதில் ஆலிஸ் என்ற சிறுமி கேட்டுக் கொண்டதால் அவளையே வைத்து அவளுக்கு ஒரு நீண்ட கதை எழுதிக் கொடுத்தான். அதை மறந்தும் போனான். தற்செயலாக அதைப் படிக்க நேரிட்ட நாவலாசிரியர் ஒருவர் அட, நல்லாயிருக்கேன்னு அதை பப்ளிஷ் செய்யச் சொன்னார். மகிழ்ந்துபோன இளைஞன் அதை இன்னும் விரிவாக எழுதி வெளியான நாவல்தான் ‘Alice in Wonderland.’
ஆங்கிலத்தின் தலைசிறந்த ஃபாண்டஸி நாவல்களில் ஒன்று. 97 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு... ஏராளம் முறை படமாக்கப்பட்டு…
எழுதியவர் Lewis Carroll... ஜனவரி 27, பிறந்தநாள்!
பலர் அறியாத விஷயம் அவர் 11 கணித புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்பது. மற்றொரு சுவாரசியம் அர்த்த ராத்திரியில் தோன்றும் ஐடியாக்கள் மறந்து போகாமலிருக்க இருட்டில் எழுத nyctograph என்ற ஒரு உபகரணம் கண்டுபிடித்திருக்கிறார் அவர்.
கணிதத்தில் அவர் கலக்கிய பிரிவுகள் Linear Algebra, Geometry, Puzzle Creatiing, Mathematical Logic என்பார்கள். Determinants ஐக் கணக்கிடுவதில் அவரது Dodgson Condensation என்ற algorithm பிற்பாடு அதில் புதிய தியரி கண்டுபிடிக்க பெரிதும் உதவிற்று. எழுதிய புத்தகங்களில் சில: Symbolic Logic, The Game of Logic, The Universe is a Hand Kerchief, An elementary Treatise on Determinants...