Tuesday, September 30, 2025

மொழிபெயர்ப்பு தினம்...

இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்.
நான் மொழி பெயர்த்த (முழி பிதுங்கிய) சில மேற்கோள்கள்…
‘வாழ்க்கையின் அந்தி
வருகிறது தன் விளக்கேந்தி!’
-Joseph Joubert (‘Life’s dusk brings its lamp with it.’)
'ஒரு வார்த்தை, ஒரு புன்னகை! உடனே மாறிடுவார்,
கையருகு புதியவர் ருசிகர நண்பராக!
பகட்டிலும் பயத்திலும் மறுக்கிறோம் நமக்கே,
மனம் வருடும் சினேகங்களை.
-D.C.Peattie. (‘A word, a smile and the stranger at your elbow may become an interesting friend. All through life we deny ourselves stimulating fellowship because we are too proud or too afraid to unbend.’)
'நிரப்பக் கொடுக்கப்பட்ட குவளையே
வாழ்க்கை.'
- William Brown (‘Life is a glass given us to fill.’)
'ஒரு நாள் கேட்பாய்
உன் வாழ்வா என் வாழ்வா, எது முக்கியமென்று.
நான் சொல்வேன் எனதென்று.
எனை விட்டுச் செல்வாய்,
என் வாழ்வே நீயென்றுணராமல்!'
-Kahlil Gibran ('One day you will ask me which is more important?My life or yours? I will say mine and you will walk away not knowing that you are my life.')
‘வாராது மீண்டும் என்பதே
வாழ்வின் சுவை!’
- Emily Dickinson (‘That it will never come again is what makes life so sweet.’)
'இன்னும் அவர்களில் எவரும்
நம்மைத் தொடர்பு கொள்ள
முயற்சிக்கவில்லை என்பதே,
அறிவுள்ள உயிரினம்
பிரபஞ்ச வெளியில் இருக்கிறது
என்பதற்கு ஒரு நிச்சய அறிகுறி.’
- Normandy Alden ('One of the surest signs that intelligent life exists in outer space is that none of it has tried to contact us yet.’)
'வீழாதிருப்பதல்ல நம் பெருமை;
வீழும்போதெல்லாம் எழுவதே.'
-Confucius ('Our greatest glory is not in never falling, but in getting up every time we do.')
‘படைத்தவனை உதவ அழை. ஆனால்
பாறைகளிலிருந்து விலகி படகோட்டு.’
- Proverb (‘Call on God, but row away from the rocks.’)
‘வரும் ஒளி உணர்ந்து இருள் விலகுமுன்
கருக்கலில் பாடும் பறவையே நம்பிக்கை.’
-RabindranathTagore (‘Faith is the bird that feels the light
and sings when the dawn is still dark.’)
'அன்பென்ற தேன் அமைந்த
அருமலரே வாழ்க்கை.'
- Victor Hugo ('Life is the flower for which love is the honey.')
'உங்கள் பிரசினைகளை
உரைக்காதீர் மற்றவரிடம்:
எண்பது சதவீதத்தினருக்கு
அக்கறையில்லை அதில்;
மீதி இருபதினருக்கோ
உமக்கவை இருப்பதில் மகிழ்ச்சி.'
- Lou Holtz ('Don't tell your problems to people: eighty percent don't care; and the other twenty percent are glad you have them.')
‘எல்லாம் இழந்தோம் எனும்போதும் நினை
எதிர்காலம் மிச்சமிருப்பதை!’
-Robert Goddard ('Just remember, when you think all is lost,
the future remains.')

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!