'A sense of humour is all that matters in this world!'
நம்முடைய 'கனவுகளைத்' திரையில் பிரதிபலிப்பவர்தான் ஹீரோ. நிஜத்தில் நாம் அப்படியல்ல என்பது நமக்குத் தெரியும். ஆம், அதைத்தான் வடிவேலு பிரதிபலித்தார். வாழ்வின் அத்தனை இக்கட்டுகளுடன்! அந்த இக்கட்டுகளில் இழையோடும் அத்தனை நகைச்சுவையுடன்! நம்ம முட்டாள்தனங்களை நாம் உணர்ந்து ஒரு விசனச் சிரிப்போட ஏத்துக்கற அந்த கணம் இருக்கே, அந்தப் பொன்னான கணங்களைத்தான் அவர் அடையாளம் காட்டினார் நமக்கு. சிக்கென்று ஒன்றிவிட்டோம் (நமக்குள் இருக்கும்) அவருடன்.
நம்மை புத்திசாலின்னு நினைச்சிட்டு நாம செய்யற அசட்டுத் தனங்கள் இருக்கே… அதுக்கு எல்லையே இல்லேங்கிறதை எல்லையில்லாத அவரது காமெடி காட்சிகள் சொல்லுது.
நமக்குள்ளே இருக்கிற லூஸை நமக்கு அறிமுகப்படுத்தினார். அதையே ரசிக்கப் பண்ணினார்.
சினிமாவைத் தாண்டி வாழ்க்கையின் பல சூழ்நிலைகளில் அவரை நினைச்சுக்கறோம். இது ஒரு சாதனையில்லையா? Take it with a pinch of salt! என்பாங்க. அதைத்தான் அவர் அழகாகக் காட்சிப் படுத்துகிறார். இன்றைய இந்த சமுகம் நம்மைப் படுத்தற பாட்டை அழகா உணரப் பண்ணுகிறார். சில சமயம் நாம இந்த சமூகத்தைப் படுத்தற பாட்டையும்!
Life is painful. Take it with a pinch of or lot of his comedy. You will feel wonderful, even if life is not!
இன்று பிறந்த நாள்! Great Artiste! வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!