Thursday, September 18, 2025

டிக் ஷ்னரி என்றாலே...


டிக் ஷ்னரி என்றாலே இவர் ஞாபகம்தான் வரும். யார்? ஜாண்ஸன்.
Samuel Johnson... இன்று பிறந்த நாள்!
வறுமையிலும் நோயிலும் தோல்வியிலும் வளர்ந்தவர்.
ஆங்கில அகராதியை அமைக்கும் பணி கிடைத்தது 1746 இல். மாபெரும் உழைப்பு. பத்து வருடத்துக்குள் 42000 வார்த்தைகளுடன் அது பதிப்பிக்கப்பட்டு ‘டிக் ஷ்னரி ஜான்ஸன்’ என்று அழைக்கப்பட்டார்.
பிரபல எழுத்தாளர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் இவர் நண்பர் என்றால் ஜேம்ஸ் பாஸ்வெல் இவர் வாழ்க்கைச் சரிதையை எழுதிய அன்பர்.
அவரது பிரபல Quotes-களில் சில.. (என் மொழிபெயர்ப்பில்)
‘கஷ்டங்களை ஜெயிப்பதைவிட மேலான சந்தோஷத்தை வாழ்க்கை கொடுத்ததில்லை.’
‘சிந்தனையின் ஆடையே மொழி. ஒவ்வொரு முறை நீங்கள் பேசும்போதும் உங்கள் மனதின் அணிவகுப்பு நடக்கிறது.’
‘விவேகம் இல்லாத நேர்மை பலமற்றது; பயனற்றது. நேர்மை இல்லாத விவேகம் ஆபத்தானது, அச்சமூட்டுவது.’
‘கவனம் என்கிற கலைதான் நினைவாற்றல் என்கிற கலை.’
‘தனக்கு அறவே பயனற்ற ஒருவனை ஒரு மனிதன் எப்படி நடத்துகின்றான் என்பதே அவனின் உண்மையான அளவீடு.’
‘சிரத்தையும் செய்திறனும் இருந்தால் முடியாதது ஒன்றில்லை. மாபெரும் விஷயங்கள் வலிமையினால் சாதிக்கப்பட்டவை அல்ல; விடா முயற்சியினால்.’
‘வாசித்தலை நேசிக்காமல் யாரும் விவேகமடைய முடியாது.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!