Saturday, September 13, 2025

உதட்டின் புன்னகை...


'மனிதனுக்கு முதல் முதலாக இருக்கவேண்டிய குணம் கருணைதான். தைரியம், வீரம், தயாளம் எல்லாம் அதற்குப் பின்னர்தான்என்பேன்.'
'உதட்டின் புன்னகை உண்மையாக இருந்தால் அது கண்களிலும் வெளிப்படும். எனவே கவனியுங்கள், யாராவது உங்களிடம் சிரிக்கும்போது கண்கள் அப்படியே இருந்தால் அது நிஜப் புன்னகை அல்ல.'
'யாராவது உங்களை நேசிக்கும் வரை நீங்கள் யார், பார்க்க எப்படி இருக்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே இல்லை.'
'இன்னும் நீங்கள் பார்த்து அதிசயிக்காத விஷயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன இந்த நம் உலகத்தில்.'
'எண்ணங்கள் நல்லவையாக உள்ள மனிதன் ஒருபோதும் அழகற்று இருந்ததில்லை.'
‘எப்பவாவது கொஞ்சம் மடத்தனமாக இருப்பதுபற்றி ரொம்ப விவேகமானவர் கவலைப்படுவதில்லை.’
'கற்பனைக்கு சமமான வாழ்க்கை இல்லை. கற்பனை உலகில் நீங்கள் மிகச் சுதந்திரமாக இருக்கிறீர்கள்.'
'அப்படி நடந்தால் இப்படி நடந்தால்'களை வைத்துக்கொண்டு நீங்கள் எங்கேயுமே போய்ச் சேர முடியாது. 'வழியில் நான் மூழ்கி விட்டால்? கடற் கொள்ளைக்காரர்கள் வந்துவிட்டால்? நான் திரும்பி வரமுடியாமல் போய் விட்டால்?' என்றெல்லாம் நினைத்து இருந்தால் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்திருக்க முடியாது.'
'அதிகாரத்தை வைத்திருப்பது அதை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்கிற அளவுக்கு முக்கியமானதல்ல.'
'வாழ்க்கையில் நீங்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் ஏராளமான புத்தகங்கள் படிக்க வேண்டும்.'
சொன்னவர்: Roald Dahl
இன்று பிறந்த நாள். (1916 - 1990)

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!