Saturday, September 27, 2025

சரியாக வாழ்வதே ...


‘பலவீனங்களில் பெரிய பலவீனம் அதிகப்படியான அச்சத்தில் பலவீனமாக காட்சியளிப்பது தான்.’
‘உலகத்தின் மீது எரிச்சலை உலகமே உண்டாக்கி விடுகிறது.’
‘உண்மை என்ற அரசியின் மகுடம் இருப்பது சொர்க்கத்தில். கடவுளின் இதயத்தில் அவளின் ராஜியம் இருக்கிறது.’
‘காரண அறிவால் புரிந்துகொள்ளமுடியாத காரணங்கள் இருக்கின்றன இதயத்துக்கு.’
‘கொடுப்பதில் உள்ள மகத்துவம் பேரிதயங்களே அறியும்.’
‘சரியாக வாழ்வதே நம்மை பயமற்ற, சந்தோஷமான சாவுக்கு தயார்படுத்துகிறது.’
‘இந்தப் பிரபஞ்சத்தின் இரண்டு அழகிய விஷயங்கள் என்னவென்று ஓர் இந்தியத் தத்துவ வாதியை கேட்டபோது அவர் சொன்னது: நம் தலைக்கு மேல் இருக்கும் நட்சித்திரங்கள் அடங்கிய வானமும் இதயத்தில் இருக்கும் கடமை உணர்வும்.’
‘எங்கள் அறியாமையின் மேல் நீ தெளிக்க போகும் வெளிச்சத்திற்காக, சாவே, உனக்கு நன்றி சொல்கிறேன்.’
‘நாம் பார்த்து அறிவது எப்படி இருந்தாலும் நாம் விரும்புவது போலவே விஷயங்கள் இருக்கின்றன என்று நம்புவது தான் ஆத்மாவின் மிகப்பெரிய சீரழிவு.’
‘வேஷங்களும் தந்திரங்களும் மனிதர்களை ஆளும்போது கவனமும் ஜாக்கிரதையும்தாம் நம்மை அதிர்ச்சிகளிலிருந்து காப்பவை.’
சொன்னவர் Jacques Benigne Bossuet. இன்று பிறந்தநாள்! (1627 - 1704)
Ceiro, Augustus வரிசையில் சொல்லப்படும் பேச்சாளர். ஏரை உடைத்தெறிந்த காளை என்றனராம் நண்பர்கள், கல்லூரியில் இவர் படித்தபோது.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!