Tuesday, November 3, 2026
22 வருடங்களாக...
Monday, November 2, 2026
30 வயதுக்கு மேல் ...
ஏகாந்தமாக குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கிறாள் அந்த லேடி. குதிரை வழியில் மக்கர் பண்ணுகிறது. ஆளற்ற வனாந்திர பகுதி! என்ன செய்வது? விழிக்கிறாள். அந்த நேரம் அங்கே வரும் இளம் ஷெரீஃப் அதன் காலைப் பார்த்து, அடிபட்ட இந்த குதிரையால் இனி நடக்க முடியாது என்று தன் குதிரையில் ஏற்றிக்கொண்டு செல்வதாக சொல்கிறார்.
Friday, October 30, 2026
இதற்காகத்தானா...
இதற்காகத்தானா...
(அன்புடன் ஒரு நிமிடம் - 5)
'அமுதம்' மே. 2012 இதழில்...
நண்பன் தியாகு வீட்டில் இருந்தான் வினோத். ஒரே ப்ராஜெக்டில் தற்போது இருவரும். அதைப்பற்றித்தான் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். உள்ளே தியாகுவின் மனைவி சித்ரா காபி தயாரித்துக் கொண்டிருந்தாள். மகன் ரவீன் விளையாடிக் கொண்டு…
“...எப்படியும் அந்த டேட்டாவை நாளைக்குள்ளே வாங்கிடணும்…” சொல்லிக் கொண்டிருந்தான் தியாகு. பலத்த சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். ரவீன் தான் தன் கையிலிருந்த கார் பொம்மையை தூக்கி எறிந்தது. எழுந்து சென்ற தியாகு அவனை ஒரு அதட்டல் போட்டுவிட்டு வந்து உட்கார்ந்தான். “இவன் இப்படித்தான் திடீர்னு எதையாவது தூக்கி எறிவான்.”
பேச்சு தொடர்ந்தது. கொஞ்ச நேரம் பேசுவதற்குள் ரவீன் அழ ஆரம்பித்தான். காலில் எதையோ போட்டுவிட்டான்போல. ஓ’வென்று அழுகை. எழுந்து சென்ற தியாகு அவனை லேசாய் கடிந்து விட்டு எடுத்து வந்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான். விளையாட ஒரு புது பொம்மையையும் கொடுத்தான்.
பார்த்துக் கொண்டிருந்த வினோத், “பாருடா அவன் ஏன் அழறான்னா…” என்று தொடங்கவும் அவன் செல் அலறியது. “என்னங்க, தண்ணீர் வரலை குழாயில்..” என்றவள் யமுனா, அவன் மனைவி. “வந்து பார்க்கிறேன்,” என்றான்.
அவர்கள் ப்ராஜெக்டை பற்றி பேச ஆரம்பித்தார்கள். கொஞ்ச நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த ரவீன் இவன் சட்டையைப் பிடித்து பின்னாலிருந்து இழுக்க, இவனால் தொடர்ந்து பேச முடியாது போயிற்று. கோபம் தலைக்கு மேல் ஏறிற்று. “சித்ரா, வந்து இவனை கொஞ்சம் உள்ளே எடுத்துப் போயேன்,” என்று குரல் கொடுத்தான், “என்னமோ தெரியலே, ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கான்.”
வினோத் சொன்னான்: “உனக்கு ஒண்ணு தெரியுமா? ரவீன் ஏன் இப்படி பண்ணறான்னு யோசிச்சியா? எல்லாமே காரணத்தோடுதான்! உன் கவனத்தை தன்பால் ஈர்க்கத்தான் அப்படியெல்லாம் செய்யறான். ஏன்னா நீ அவனை கவனிக்காம என்கிட்ட பேசிட்டிருக்கே. அவன் அம்மா காப்பி போட போயிட்டா. அதான் இப்படி எல்லாம் பண்ணி உங்களை அவன்கிட்ட இழுக்கிறான்!” என்று அதை விளக்கினதும் கேட்டுக் கொண்டிருந்த தம்பதிகள் முகத்தில் பிரகாசம். “அட சரியாச் சொல்லிட்டே!” என்ற தியாகு மனைவியிடம், “காபி எல்லாம் அப்புறம் போடலாம், நாங்க பேசி முடிக்கிறவரை ரவீனை நீ பார்த்துக்க!” என்று அவளிடம் பையனை ஒப்படைத்தான்.
நண்பர்கள் ப்ராஜெக்ட் விஷயம் தொடரலாயினர். அப்போது மறுபடி செல்லில் யமுனா அழைத்தாள். “என்னங்க அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் ஆயுத பூஜை கொண்டாடறதை பற்றி பேச வந்திருக்கிறாங்க. உடனே வாங்க.”
“ரைட், அப்புறம் பேசலாம்டா!” புறப்பட்டான் வினோத்.
“பாவம் முக்கியமான விஷயம் டிஸ்கஸ் பண்ணணும்னு வந்து உட்கார்ந்தார். பாதியிலே போகும்படி ஆகிவிட்டதே?” என்று வருந்தினாள் உள்ளிருந்து வந்த சித்ரா. “என்ன பிரச்சனையாம்?”
சொன்னான். ஒரு நிமிடம் யோசித்தாள் சித்ரா. “இதை அவங்களே சமாளிச்சிருக்கலாமே!”
அவள் தோளில் சாய்ந்திருந்த ரவீனை பார்த்தான் தியாகு. “எல்லாமே காரணத்தோடுதான்!” என்றான்.
Wednesday, October 28, 2026
நேர்த்தியான சிந்தனையாளர்...
Sunday, October 25, 2026
அந்த ஒரு காட்சி...
Saturday, October 24, 2026
'DOROTHY' ஒரு பார்வை...
'DOROTHY' ஒரு பார்வை...
மெல்லத் தோளில் கைபோட்டு, கை கோர்த்து நமக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு உலகத்திற்கு அழைத்து சென்று விடுகிறார்கள். அந்தப் பூவிதழ் புதிதான உலகம் இத்தனை மென்மையானதா? மனதை இத்தனை வருடுவதா? உரக்க ஏதும் சொல்லாமலேயே அதில் சற்று உறைய வைக்கிறார்கள்…
(முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்று நினைத்தால் ஒரு ஆரம்ப புள்ளியையும்..)
என்ன ஒரு நுட்பமான பார்வை! என்ன ஒரு கண்ணியமான பிரசன்டேஷன்! அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை
ஆரம்பத்தில் துண்டு துண்டு சீன்களாக கோர்த்து (ஏன்னா கதையே வேறு!)
போகப்போக காட்சிகளின் நீளத்தை அதிகரித்துக் கொண்டே போய் மையப் புள்ளியை நோக்கி நகருவது செமத்தி. மெயின் திருப்பத்தை முடிந்தவரை ஊகிக்க முடியாதபடி கொண்டுபோய் மொட்டவிழ்க்கிறார்கள் என்றால் முதலிலேயே flash forward காட்சி ஒன்றைச் செருகி அதை இறுதிக் காட்சியாக நினைக்க வைத்து, அடுத்த திருப்பத்தை அசத்தலாக்கி இருக்கிறார்கள். முடிவில் இனி என்ன, எப்படி என்ற ஆர்வம் இயல்பாக தொற்றிக் கொள்ள அதற்கு ஒரு முடிவை கொடுத்து… அப்புறம் அதுக்கு மேலே கிளைமாக்ஸைப் படர விட்டு… விளையாடியிருக்கிறார்கள் திரைக்கதையில்! distinction!
ஃப்ளாஷ் பேக்குக்கு ஒரு கலரும், பிளாஷ் ஃபார்வர்ட்க்கு ஒரு கலரும் என்று தெளிவாக வைத்திருக்கிறார்களோ, குழம்பாமல் இருக்கிறோமோ? ஆனாலும் தாடிகளுக்குள் முகங்களை அடையாளம் கண்டு கதையை ஃபாலோ பண்றதுக்குள்ளே…
இன்னும் நிறைய வசனங்களை ரசித்திருக்கலாம், கொஞ்சம் தெளிவாக பேசி இருந்தால்!
(Slang அல்லவா?) கார்த்தி, ஆங்காரம் வேணும் என்பதும் அங்கீகாரம் என்று வடிவேலு திருத்துவதும் இயல்பாக…
அந்தக் கிணறு காட்சியில் ஒளிப்பதிவாளருக்கு நல்ல வேட்டை. சுப்பு கண்ணாடியில் தன் முகத்தையும் கார்த்தியையும் பார்ப்பதும் நல்ல ஃபோகஸ். அந்தத் தற்கொலைக் காட்சியின் அதிர்ச்சி, பரபரப்பு அனைத்தையும் கச்சிதமாக ஒரே ஷாட்டில் கொண்டு வந்து விடுகிறது காமிரா, இண்டு இடுக்குகளில் புகுந்தோடி.
அந்த லா….ங் ஷாட்டில் திரையின் கீழ் ஓரத்தில் கார்த்தியும் வடிவேலும் பேசிக் கொண்டிருப்பது ஒற்றைத் தாளில் கீழே இரு முற்றுப் புள்ளிகளாக… எத்தனை அழகு!
சிவாஜி மார்க் பாத்திரத்தை தூக்கி இரண்டு இளம் நடிகர்களிடம் நம்பிக்கை வைத்துக் கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். துளியும் ஏமாற்றாமல் பிற்பாதியில் பிழிந்து எடுக்கிறார்கள் உணர்வுகளை.
ஜாலியாய் சாப்பிடும் சகோதரர்கள் சாப்பாட்டை முடிப்பதற்குள் சண்டை போட்டு அரிவாளைத் தூக்க நிற்க, அலட்டாமல் அடகு நகை மீட்க வரும் அபலையை வளைக்கும் அப்பன்… அவரும் அந்த திகில் விசிலும்! கதையின் பின்புலத்துக்கு ஏற்ற மாதிரி பாத்திரப்படைப்பு.
அது எப்படித்தான் கண்டு பிடிப்பாரோ எந்தக் காட்சிக்கு எந்த ப்ரேமில் தொடங்கி எங்கே நிறுத்தணும் இசையை என்று? இதமான காட்சிகளில் இறகால் வருடுகிற மாதிரியும் மிதமான காட்சிகளில் சரியான உணர்வு பீறிடுகிற மாதிரியும் மில்லி கிராம் சுத்தமாக, கச்சிதமாக கொடுத்திருக்கிறார். கற்றுக் கொள்ளலாம். பாத்திரங்களின் உணர்வுகளை இயக்குனர் சொல்லாமல் விடும் இடங்களில் எல்லாம் அவர் சொல்லி விடுகிறார். பின்னே கிளைமாக்ஸும் முத்து மணிச்சரம் பாடலும் நகமும் சதையுமாக…
இந்தப் படத்திலே அது நல்லாருக்கு இது நல்லாருக்குன்னு சொல்றது கஷ்டமாயிருக்கு. ஏன்னா கிட்டத்தட்ட எல்லாமே நல்லாருக்கு.
சும்மா இங்கே ஒரு ரவுடி அங்கே ஒரு ரவுடி மாதிரியை நிறுத்தி கோழிச்சண்டை காட்டிக் கொண்டிருக்கும் நம்ம சினிமாவுக்கு அவ்வப்போதாவது தேவையான மறுபக்கம் தான்..
ஒரே மாதிரி கதையை 9999 தடவை படங்களில் பார்த்துவிட்டோம். அப்படி இல்லாத இது பத்தாயிரத்தில் ஒன்று
நம்மைச் சுற்றி சில அழகிய மென்மையான உலகங்கள் இருக்கிறது. நாம் அவற்றை கொண்டாடவிட்டாலும் பரவாயில்லை, கண்டு கொள்ளாமல் விட்டாலும் பரவாயில்லை, அறிந்துகொள்ளவாவது வேண்டாமா? காலத்தின் எத்தனை அவசியம் அது! கார்த்திக் அதைத்தான் செய்திருக்கிறார். கும்பிடுகிறேன் அவரை.
How to name it? Except by the word ‘Great’?
Wednesday, October 21, 2026
சொந்த அக்காவே...
நாலைந்து படங்களில் தலைகாட்டியிருந்தார் அந்த நடிகை. ஒரு பார்ட்டியில் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்தப் பெரிய புரட்யூஸர் (‘Gone With The Wind’ எடுத்தவர்) தான் படமாக எடுக்கவிருக்கும் பிரபல நாவல் ஹீரோயினாக நடிக்க டெஸ்டுக்கு அழைத்ததும் உச்சி குளிர்ந்து போனார் உச்ச நட்சத்திரமாகும் அந்த வாய்ப்பில். ஆனால் அதே அழைப்பு பல பிரபல நடிகைகளுக்கும் சென்றிருந்தது. அடுத்து ஆறு மாசம் நடந்த பலத்த போட்டிக்கு இடையே அதைக் கைப்பற்றினார். உச்ச நட்சத்திரமாகவும் ஆனார்.
Tuesday, October 20, 2026
ஜாலி ஸ்வீட் நடிகர்...
ஜாலி நடிகர்... ஸ்வீட் நடிகர்... ஐம்பதுகளில் கொட்டகைகளை அதிரச் செய்தவர். இளசுகளின் அபிமான கதாநாயகன். ஜாலியாகப் பொழுது போக்கலாம் என்று வருபவர்களுக்கு ஏமாற்றம் இல்லாத திரைக்கதை. சூப்பர் ஹிட் பாட்டுகள். பெரும்பாலும் சங்கர் ஜெய்கிஷன்.
Monday, October 19, 2026
உறுதிகள் உச்சத்தில் ...
இறுதி காட்சியில் கிளர்ந்தெழும் அந்த ‘லா...லா... லா...லா..’ பி.ஜி.எம்., படம் முடிந்த 20 நிமிடத்திற்கு மேல் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. நிறுத்த முடியவில்லை.
Saturday, October 17, 2026
குப்பையிலும் மலரும் பூக்கள்…
குப்பையிலும் மலரும் பூக்கள்…
கே.பி.ஜனார்த்தனன்
“ஏன் தாத்தா, குப்பைச் செடிக்கு ஏதாச்சும் விசேஷம் உண்டா?” கேட்டான் அபிஜித், “கிடையாது தானே?”
எட்டவே எட்டாத விஷயம் தன் ஐ.க்யூவுக்கு என்றால் அவன் ஓடி வருவது தாத்தாவிடம்தான்.
“சரி, நீ விஷயத்துக்கு வா,” என்றார் சாத்வீகன், “என்ன சந்தேகம் இப்போ?”
“நேற்று முழுக்க தலையைப் பிய்ச்சுக்கிட்டேன்…” என்று ஆரம்பித்தான் அபிஜித். “அப்பா அம்மாவோட நம்ம ஏகாம்பரம் மாமா வீட்டுக்கு போயிருந்தப்பதான்… அப்பா இருக்காரே அவர் திடீர்னு பேச்சுக்கு நடுவில் அம்மாவிடம், ‘வர்ற வழியில் பார்த்தியா, குப்பை மேலே செடி செடியா வளர்ந்து கிடந்ததே?’ன்னு கேட்டார். நார்மலா வீட்டிலே வெச்சு இப்படி எல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாம அவர் பேசறதே கிடையாது.”
“அப்படியா?”
“ஆமாங்கிறேன். எனக்கு புரியலே. என்ன தாத்தா இது? இந்த அப்பா என்ன இப்படி எல்லாம் பெனாத்த ஆரம்பிச்சிட்டாரு?”
“யோசிச்சுப் பாரு, புலம்பினாரா என்ன?”
யோசிக்கையில் அப்படி இல்லை என்று தோன்றிற்று.
”கொஞ்சம் விலாவாரியா சொல்லு. அப்ப என்ன பேசிட்டிருந்தாங்க?”
“அப்பா புது வீடு கட்டினப்ப வேலை முடியாம வெளியிலே வாங்கின கடனைப் பத்தி பேசிட்டிருந்தாங்க எல்லாரும். அது தப்புன்னு மாமா லெக்சர் விட்டுட்டிருந்தாங்க. அம்மா அப்ப ஏதோ ஒரு பாயிண்டை வேகமா சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்பதான் இவரு, ‘வர்ற வழியில பார்த்தியா, குப்பை மேலே செடி செடியா வளர்ந்து கிடந்ததே, பார்க்க அழகா இருந்ததில்லையான்னு…”
“அப்புறம்?”
“அம்மா ஒரு நிமிடம் முழிச்சாங்க. அப்புறம் ஆமா ஆமான்னு பதில் சொன்னாங்க. அப்பா மாமாகிட்ட ஏதோ பேச ஆரம்பிச்சிட்டாங்க. அம்மாவும் தொடர்ந்து மாமாவிடம் விட்ட இடத்திலிருந்து பேசினாள். நான்தான் தலையை பிய்ச்சிக்கிட்டேன்.”
ஒரு நிமிடம்தான் யோசனை செய்தார் தாத்தா. ”டே, உங்கப்பா விவரமான ஆளுதான். ஒரே வார்த்தையில் எக்கச்சக்கமான சூழ்நிலையை சரி பண்ணிட்டாரே? வீடு கட்ட கடன் வாங்கினதை மாமா விமர்சிக்கிறார். அது அவர் ஐடியா. நம்மைக் குற்றம் சொல்ற மாதிரி அதில் வார்த்தைகள் விழுந்தாலும் அவருக்குள்ள அக்கறையில் பேசறார். அவரோட ஐடியாக்களை சொல்றார். அதிலுள்ள நல்லதை எடுத்துவிட்டு மற்றதை விட்டுடணும். அதை உபயோகிச்சு நாம மேம்பட முடியுமான்னு பார்க்கணும். இதான் அப்பாவோட மெசேஜ் அம்மாவுக்கு. அழகா கொடுத்துட்டார். அவளும் புரிஞ்சிட்டு தன் பேச்சைத் தகுந்தாற்போல மாத்திக்கிட்டா. ஐடியல் தம்பதிதான்!”
“என்ன தாத்தா இது? அதுக்கு குப்பை செடின்னு சொன்னால்?”
“குப்பையிலே வளர்ற செடி என்ன பண்ணுது? அதிலுள்ள நல்ல சத்தை மட்டும் எடுத்துக்கிட்டு, தான் அழகா வளருது இல்லையா?” என்று சிரித்தார் அழகாக.
அன்புடன் ஒரு நிமிடம் - 4
‘அமுதம்’ ஏப். 2012 இதழில்…
><><><><
Thursday, October 15, 2026
நல்ல அறிவுரையை...
’சிலர் தாங்கள் எந்த இடத்துக்கு செல்லும்போதும் அதன்
சந்தோஷத்திற்குக் காரணமாகிறார்கள்.
Monday, October 12, 2026
ஆர்வம் இல்லாமலே...
நடிப்பதில் அவருக்கு துளி ஆர்வம் இல்லை. ஸ்டூடியோ லேபரட்டரியில் அசிஸ்டன்டாக தான்பாட்டுக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவரை பிடித்து தள்ளாத குறையாக கேமரா முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். புக் செய்திருந்த ஹீரா நடிகருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால். நடிக்க வேண்டியதோ பிரபல நடிகை தேவிகா ராணியுடன். தயங்கித் தயங்கி நடித்து முடித்தவர் லேபரட்டரியில் வந்து ரஷ் பார்த்தபோது அவருக்கே ஆச்சரியம்! அட, நன்றாகவே நடித்திருக்கிறோமே? அவருடனேயே அடுத்த படம் நடித்தபோது அந்த ‘அச்சுத் கன்யா’ உச்சத்துக்குக் கொண்டு போனது அவரை.












