புயலால் அலைக்கழிக்கப்படும் அலைகள் அமைதியான அலைகளை விட சூடாக இருந்ததைப் பார்த்தார். யோசித்தார். ஜாவாவை நெருங்கும்போது இன்னொன்றை கவனித்தார். நோயாளியின் நரம்பில் இருந்து வெளியான ரத்தம் நம்ப முடியாத அளவு சிவப்பாக இருந்ததை பார்த்தார். (‘தமனியைத் தான் தவறாக அறுத்து விட்டோமோ?’) சிந்தித்தார். கண்டுகொண்டார் அதன் காரணத்தை. 'குறைவான ஆக்ஸிடேஷன் என்பதால் குருதியின் வண்ணம் மாறவில்லை. வெப்ப நாடுகளில் உடல் சொற்ப வெப்பமே உண்டாக்குகிறது, தேவை அவ்வளவே,' என்பதை.
லேசில் வெளிவர முடியுமா இத்தனை சுவாரசியமான விஷயத்திலிருந்து ஒரு அறிவு ஜீவியால்? ஆராய்ந்ததில்...
உணவு வெப்பமாகவோ வேலை திறனாகவோ மாறுகிறது. வெப்பமும் வேலைத் திறனும் மாற்றிக் கொள்ளக் கூடியது. எப்படி மாறினாலும் அதன் மொத்த அளவு மாறாது!
கண்டுபிடித்தார் கன்ஸெர்வேஷன் ஆப் எனர்ஜியை. எழுதினார் தெர்மோ டைனமிக்ஸின் பொன்னான முதல் விதியை. 'சக்தியை உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது.'
Julius Mayer... (1814 - 1878) இன்று பிறந்த நாள்!
அடிப்படையில் டாக்டரான இவர் தன் இயற்பியல் கண்டுபிடிப்பை விளக்க சற்றே திணறினார். விண்ணப்பித்த பேப்பரை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். இதற்காகவே இயற்பியல் பயின்றவர் அடுத்த பேப்பரை இன்னும் சிறப்பாக எழுதினார்.
அதற்குள் Joule கிளம்பிவிட்டார் அதே விஷயத்துடன். பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டை Joule ஐவிட துல்லியமாக Julius சொல்லிய பின்னும் அவருக்கே ஓட்டு.
சரியான அங்கீகாரம் கிடைக்காததில் மனம் சரியின்றி நொந்து போனார். ரொம்ப லேட்டாக அங்கீகாரம் 1960-க்கு மேல் வந்தபோது உடல்நலம் கீழ் இறங்கி இருந்தது.
'என் முடிவு திடமானது. புவியீர்ப்பு, ஒளி, வெப்பம், அசைவு, மின்சாரம், இயற்பியல் மாற்றம் இவை அனைத்தும் வெவ்வேறு விதத்தில் வெளிப்படும் ஒரே பொருளே.'
எப்பேர்பட்ட விஷயம்! பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களின் மூலக்கூறுகளுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு தான் எல்லா சக்திக்கும் அடிப்படை. ஒருபோதும் அழியாத அதன் மொத்த அளவு எப்போதுமே மாறாது என்றவருக்கு ஒரு வணக்கம்!

No comments:
Post a Comment