தூரத்து வயலின் குளிர்ப் பச்சையைக் கண்கள் மேய்ந்திட
எங்கிருந்தோ ஒலிக்கும் ராஜாவின் ராகம் காதைத் தழுவ
புதிதாய் வாங்கிய புத்தகத்தின் மணம் நாசியை வருடிட
மத்தியானசோற்றின் புளிக்குழம்பு மாவடுவும் நாவில் கரைந்திட
பஸ் ஏறிடும் துணைவியின் கையை பதமாய்ப் பற்றிட
ஆகச் சுவையானது உலகம்.
எதுக்காக?
கனவுகளின் எண்ணிக்கையைத் தொடவோ
வண்ணங்களைத் தரவோ
ஒளியை நெருங்கவோ
வேகத்தைப் பெறவோ
முடியவில்லை நனவுகளால்
அப்புறம் என்ன அழகு இந்த நனவுலகம்!

No comments:
Post a Comment