Friday, November 13, 2026

ஆயிரம் கேள்வி...


‘எந்த அறிவாளியாலும் பதில் சொல்ல முடியாத
ஆயிரம் கேள்விகளைக் கேட்க முடியும்
ஒரு குழந்தையால்.’
சொன்னவர் ஜேகப் ஆபட்.
இளைய வயதினருக்கு ஏற்ற புத்தகங்களை எழுதிய Jacob Abbott -இன் பிறந்த நாள் இன்று!
சரித்திரப் புத்தகங்களை சுவாரசியமாக பரபரப்பாக திருப்பங்களுடன் எழுதலாம் என்று காட்டியவர். ஆப்ரஹாம் லிங்கன் வியந்து பாராட்டிய இவரின்
Rolle சிரீஸ் புத்தகங்கள் மிகவும் பிரபலம். தொடர்ந்து படைத்த Uncle George கேரக்டரும்..
அவர் சொல்கிறார்:
'குழந்தைகளை முடிந்தவரை தானாக விடுங்கள்... நல்லதோ கெட்டதோ வீண் தோழமையைத் தவிருங்கள்... மிக புத்திசாலித்தனமான திறமையான நபர்கள் எல்லாம் மிகக் குறைவான சேர்க்கையுடன் வளர்க்கப்பட்டவர்களே... சொல்லப்போனால் தன்னுடைய சந்தோஷமான, நல்ல நேரங்களை தனியே கழிக்க முடியாதவர்களின் சிந்தனையாற்றல் பயன்படுத்தப்படாமலும் வெளித் தெரியாமலும் போய்விடலாம்

No comments: