Sunday, August 31, 2025

ஜன்னல் பெண்ணின் சோக முகம்...


பிசியான வேலை, பிரிய மனைவி, இனிய குடும்பம். ஆனாலும் ஜான் மனதில் ஏதோ வெறுமை. தினம் வீடு திரும்பும் வழியில் பார்க்கும் ஜன்னல் பெண்ணின் சோக முகம் அவனை கவருகிறது. நடன நிலையம் அது. அவளை சந்திக்கவே நடனம் கற்றுக் கொள்ள சேருகிறான். எந்திரமாக இயங்கும் அவள். இவனுக்கோ நிஜமாகவே நடனத்தில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. அடுத்து நடைபெறும் நடனப் போட்டிக்கு தயாராகிறான். இவனிடமிருந்து அவளுக்குத் தொற்றுகிறது உற்சாகம். மனைவி, மகள் வந்ததில் கவனம் சிதறி போட்டியில் இவன் தோற்றாலும் அடுத்து நடைபெறும் போட்டி ஒன்றில் கலந்து கொள்ள அவளை ஊக்குவிக்கிறான். முன்பு தோற்ற அதில் இப்போது ஜெயிக்கிறாள் அவள்… என்று போகிறது அந்த மூவீ.
நடன பயிற்சியாளர் ஆக ஜெனிஃபர் லோபஸ் ஜொலிக்க, அந்த ‘Shall We Dance?’ படத்தில் ஜான் ஆக கவர்ந்தவர் ரிச்சர்ட் கீர்.
Richard Gere.. இன்று பிறந்த நாள்!
Fine actor என்று ஒருவரை சொல்வதானால் இவரை சொல்லிவிடலாம் மறுப்பின்றி.
‘Pretty Woman’ படத்தில் சாதாரண பெண்ணான ஜூலியா ராபர்ட்ஸுக்கு மேல்தட்டு மனிதர்களின் நடைமுறைகளை பொறுமையாக கற்றுத் தருவதில் காட்டும் நேர்த்தி ஆகட்டும், தோற்றுப்போன கம்பெனிகளை இற்றுப்போன விலைக்கு வாங்குவதில் காட்டும் கண்ணியம் ஆகட்டும் படு கச்சிதமான நடிப்பு. இந்தப் படத்தில் வரும் Piano piece இவர் இயற்றியதே...
Julia Roberts உடன் கலகல பூட்டிய ‘Runaway Bride’. ‘An Officer and a Gentleman’ ‘Primal Fear’ இப்படி நிறைய ஹிட்ஸ் இந்த நாயகருக்கு. ‘Chicago’ வில் அவர் ஆடும் டேப் டான்ஸ் கலக்கல்.
பழங்குடி மக்கள் நலனுக்காக பாடு படுவது இவருக்கு பழம் சாப்பிடுவது மாதிரி.
Quotes…
‘பர்சனாலிட்டி ஆவதற்கு நான் விரும்பவில்லை.’
‘அந்த நேரம் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கும்போது நடிகர்கள் சிறப்பாக பரிமளிக்கிறார்கள்.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!