இப்ப இந்த 9 வருட வாழ்க்கை மறந்துவிட்டது. இப்போது தான் யார் என்று ‘தன்’ லக்கேஜைக் குடைந்து பார்த்தபோது பணக்கார பிசினஸ்மேன்னு தெரியுது. பேங்க் பாஸ்புக்கில் ஒன்றரை லட்சம் டாலர். ‘ஆஹா! பணத்தை அடித்துவிட்டு கம்பி நீட்டி விடலாம்!’
கரையில் இறங்கினால் ஒரு இளம்பெண் வரவேற்கிறாள். மனைவி! அடுத்த ஜாக்பாட் ஆக தெரிகிறாள் அந்த அழகி. மனைவியாமே.. அடடா, பேர் கூட தெரியாதே? எதற்கோ Okay, Okay என்றிவன் சொன்னப்போ யெஸ் என்று அவள் திரும்பிப் பார்க்க, அவள் பெயர் Kay என்று தெரிகிறது. ‘இப்பேர்ப்பட்ட அழகியோட கணவனா நான்?’
ஆனால் அவளோ அவன் கையெழுத்துக்காக காத்திருக்கும் டைவர்ஸ் பேப்பரை நீட்டுகிறாள். 'டல்லான வெறும் பிசினஸ் மக்கு! யார் வாழ்வார்கள் அவனோடு?' அதான் காரணம். திகைத்தவன் ஒரு மாசம் டைம் கேட்கிறான்.
பேங்கில் போனால் அவனுக்கு அடுத்த அதிர்ச்சி. அந்த பணம் கம்யூனிட்டி ஃபண்டு. கை வைக்க முடியாது.
வேறென்ன கவிழ்க்க முடியும் தன் ‘மறுபதிப்பி'டமிருந்து? யோசிக்கிறான். ஏகப்பட்ட நல்ல பேர் இருக்கிறது வில்சனுக்கு. சொந்தமா கொஞ்சம் நிலமும். நண்பன் டியூக் ஐடியா தருகிறான். ‘அந்த நிலத்தில் பெட்ரோல் இருப்பதாக நம்ப வைத்து ஏகப்பட்ட விலைக்கு விற்றுவிடலாம்!’
இங்கே கே-க்கு ஆச்சரியம். படு ஜாலியான கணவனைப் பார்த்து! பார்ட்டி என்ன, டான்ஸ் என்ன? கலக்குகிறான். கருமியா இருந்தவனா இப்படி? தடுமாறுகிறாள் தன் முடிவில்.
பெட்ரோலை வாங்கி நிலத்தில் கொட்டிவிட்டு, பணக்காரப் பசங்களை அந்த இடத்துக்கு டூர் அழைத்துச் செல்வது போல அழைத்து வந்து ‘தற்செயலாக’ பார்க்க வைக்கிறான். அப்பாக்கள் ஓடிவந்து போட்டி போட்டு ( ட்யூக் வந்து விலையை ஏற்றிவிட) அபார விலைக்குப் பேசுகிறார்கள். ‘அப்பாடா, பணம் வந்ததும் ஓட வேண்டியதுதான் பாக்கி!' ஆனால் இப்ப அவனுக்கு டிலெம்மா. கூடி வாழவா ஓடி அவளை இழக்கவா? கே தான் ஜெயிக்கிறாள் மனதில்.
ஆனால் ட்யூக் விடுவதாயில்லை. மிரட்டுகிறான். அவனை எதிர்க்கும்போது தலையில் அடிபடுகிறது ஜார்ஜுக்கு. மறுபடி பழைய வில்சனாகிறான். ட்யூக், கே ரெண்டு பேருக்குமே ஏமாற்றம். ட்யூக் தன் திட்டம் பலிக்காதே இனியென்று அகலுகிறான்.
இப்பதான் கே-க்கு ஐடியா ஃப்ளாஷ் ஆகிறது. ஆக, தலையில் அடிபட்டால் போதும், தன் 'அடுத்தது'க்கு ஸ்விட்ச் ஓவர் ஆகிவிடுவான் அவன்! அகப்பட்ட ஃப்ளவர் வேஸை எடுத்து ஓங்குகிறாள் அடிக்க. “ஐயையோ, நடிச்சேனாக்கும் நானு!" என்கிறான், மறுபடி அம்னீசியா வந்த மாதிரி நடித்த ஜார்ஜ்.
1940 இல் வந்த 'I love you again' எந்தளவு ஹிட் என்றால் இதே ஜோடியை வைத்து இதே போன்ற கதையில் அடுத்த படம் எடுக்கிற அளவுக்கு. படத்துல வர்ற எல்லா ஜோக்குகளும் கிடைக்கணும்னா, நீங்க படத்தை ரெண்டு தடவை பார்க்கணும்னு ட்ரெய்லர் சொல்லும்.
பிரபல Clark Gable -உடன் பல படங்களில் நடித்தவர். 1936 -இல் அவரை சினிமாவின் கிங், இவரை க்வின் என்று சொன்னாங்க. தன் வசீகரத்துக்கு முக்கிய காரணமாக ஒளிப்பதிவாளர்களை நன்றியுடன் கைகாட்டுவார்.
சொன்னார் பாருங்க, நச்சென்று ஒரு Quote!
‘Life is not a having and a getting but a being and a becoming.’
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!