Monday, August 25, 2025

அன்பு… கருணை…


அன்பு… கருணை… அன்னை தெரஸா…
இன்று பிறந்த நாள்!
‘நேசிக்கவும் நேசிக்கப்படவுமே படைக்கப்பட்டிருக்கிறோம் நாம்.’ என்றவர் சொன்ன இன்னும் சில:
‘தீவிர அன்பு எதையும் அளக்காது; அளிக்கும்.’
‘வலிப்பது வரை கொடுப்பது; அன்பின் உண்மையான அர்த்தம் அதுதான்!’
‘கடவுளுக்கு என் நன்றியை தெரிவிக்க மிகச் சிறந்த வழி என் பிரச்சனைகள் உள்பட எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதுதான்!’
‘ஒவ்வொருவரையும் ஆராய்ந்து கொண்டிருந்தால் அவரை நேசிக்க நேரம் இருக்காது.’
‘நீங்கள் எத்தனை செய்கிறீர்கள் என்பது முக்கியம் அல்ல, செய்வதில் எத்தனை அன்பு வைக்கிறீர்கள் என்பதே.’
‘உண்மையிலேயே அன்பு செலுத்த விரும்பினால் நீங்கள் மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.’
‘நாம் பிரார்த்தனை செய்தால் நம்பிக்கை வைப்போம். நம்பிக்கை வைத்தால் நாம் அன்பு செலுத்துவோம். அன்பு செலுத்தினால் நாம் சேவை செய்வோம்.’
‘நீங்கள் எளிமையாக இருந்தால் புகழ்ச்சியும் சரி, இகழ்ச்சியும் சரி உங்களைத் தொட முடியாது. ஏனெனில் நீங்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள்.’
‘உங்களைக் கடவுளிடம் முழுமையாக ஒப்படையுங்கள். மாபெரும் விஷயங்களை சாதிப்பதற்கு அவர் உங்களை பயன்படுத்துவார். உங்கள் இயலாமையை விட அவரின் அன்பில் அதிக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதொன்றே நிபந்தனை.’
‘எத்தனை பேருக்கு என்று கவலைப்படாதீர்கள். ஒரு சமயத்தில் ஒருவருக்கு உதவுங்கள். பக்கத்தில் இருப்பவரிடம் இருந்து ஆரம்பியுங்கள் எப்போதும்.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!