வெரி வெரி மோசமான ‘பெரிபெரி’ என்ற அந்த நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தாகவேண்டும் அவர். புத்தியைத் தீட்டியதில், தீட்டிய அரிசியைத் தீனியாக கொண்ட போது மட்டுமே கோழிகளுக்கு அந்த நோய் வந்ததைத் தெரிந்து கொண்டவர், தவிட்டில் இருக்கிறது சூட்சுமம் என்று தவித்தார். அதிலிருக்கும் அந்த ஏதோ ஒன்று என்னவென்று அவர் நண்பர் கண்டுபிடித்தார்.
இந்த வைட்டல் டிஸ்கவரியில்தான் வைட்டமின் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. Vital -ஐயும் amine (நைட்ரஜன் காம்பவுண்ட்) -ஐயும் சேர்த்து ‘வைட்டமின்’ பேர் வைத்தவர் மற்றொரு நண்பர்.
Christiaan Eijkman. இன்று பிறந்த நாள்! (1858 - 1930)
பல ஊகங்களை உடைத்தெறிந்தவர். வெப்பப் பிரதேசங்களில் வாழ நேரும் ஐரோப்பியர்களுக்கு அப்படியொன்றும் மெட்டபாலிசம் மாறிவிடுவதில்லை என்று காட்டினார். வேலையைப் பொருத்தே வேர்க்கும் யாராயிருந்தாலும்! எண்ணிக்கையில் சிவப்பு அணுக்கள் எல்லோருக்கும் ஒன்றுதான், என்றார்.
நோபல் கிடத்தது 1929-இல்.
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!