Hat-trick அடித்த பெண் எழுத்தாளர் Jacqueline Susann. இன்று பிறந்த நாள்!
எழுத்தாளராக வர வேண்டியவர் முதலில் விரும்பியது நடிகை ஆக. நாடகம், டிவி, சினிமா என்று முயன்றதில் பெற முடியாத இடத்தை கடைசியில் எழுத்து பெற்றுத் தந்தது.
முதல் நாவல் ‘Valley of the Dolls.’ விமரிசன வரவேற்புக்கு எதிர் விகிதத்தில் விற்பனை எகிறிற்று. ஒன்றரை கோடி பிரதிக்கு மேல் விற்று கின்னஸில் இடம் பிடித்தது 1974 இல்.
மூன்று நாவல்களுமே படமாக வந்தன. நன்றாக இல்லை என்று அவர் வர்ணித்த ‘Valley…’ நல்லாவே கல்லா கட்டியது. மூன்றாவது நாவல், ‘Once is not Enough.’ கிர்க் டக்ளஸ் நடித்து ஹிட்டானது.
Quotes?
‘எவருக்குமே ஒரு அடையாளம் உண்டு. அவரது சொந்த அடையாளம் ஒன்று. அவர் மற்றவருக்கு காட்டும் அடையாளம் ஒன்று.’
‘மற்றவர்கள் சொல்லும் அபிப்ராயத்தை வைத்து ஒருவரை எடை போட்டு விடாதீர்கள். எல்லாருக்குமே வேறு வேறு பக்கங்கள் உண்டு வேறு வேறு நபர்களுக்கு காட்டுவதற்கு.’
‘எவரெஸ்டில் ஏறுவது சுலபமான விஷயம் அல்ல. ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறீர்கள். திரும்பிக் கீழே பார்க்காதீர்கள். கண்கள் உச்சியிலே இருக்கட்டும்.’
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!