Thursday, August 21, 2025

அந்த ஒன்றை...


எந்த ஒன்று மட்டும் இல்லை என்றால் திணறித் திண்டாடிப் போவோமோ, அந்த ஒன்றை உருவாக்கிய ரெண்டு பேரில் ஒருவர் அவர்.
தகவல் என்ற மலையை எல்லார் கைக்குள்ளும் அடங்கும்படி செய்த இருவர். சிறு கூழாங்கல்லாக.. ஆம், கூகிளாக..
Google! உலகின் மொத்த விஸ்தீரணமும் ஒற்றை அடியாகி விட்டது. அதாங்க உங்க உள்ளங்கைக்கும் லேப்டாப்புக்கும் உள்ள தூரம்.
Sergey Brin… இன்று பிறந்த நாள்!
மேரிலாண்ட் யூனிவர்ஸிடியில் கணக்கிலும் கம்ப்யூட்டர் சயின்ஸிலும் ஹானர்ஸுடன் B.S. முடித்தவர் மேல்படிப்புக்காக சேர்ந்த ஸ்டான்ஃபோர்டில் அந்த இரண்டாமவரை (Larry Page) சந்தித்தார்.
எத்தனை தூரம் ஒரு வெப்ஸைட் மற்றொன்றால் இணைக்கப்படுகிறது என்பதைக் கொண்டு அதைத் தரப் படுத்தலாம் என்று யோசித்தார்கள். Page Rank என்ற அதன் முதல் அல்காரிதத்தை எழுதினார்கள். சடுதியில் பதில் தரும் கூகுள் பிறந்தது, லாரி பேஜ் தங்கிய விடுதியில்.
இப்படி ரெண்டு பேருமாக சேர்ந்து செய்த ரிஸர்ச்சில் உருவானது உலகின் மாபெரும் ஸர்ச் என்ஜின். ஒன்றுடன் நூறு சைபரை அடுக்கினால் வரும் மாபெரும் எண்ணைக் குறிக்கும் சொல் Googol. அதிலிருந்து தோன்றியது Google.
குடும்பம் நண்பர்கள் என்று உதவிக்கு கிடைத்த ஒரு மில்லியனை கொண்டு உருவாக்கிய தேடல் என்ஜினை இன்று தினமும் ஒரு ட்ரில்லியன் பேருக்கு மேல் கிளிக்குகிறார்கள்.
வேக வளர்ச்சி. YouTube -ஐச் சொந்தமாக்கிக் கொண்டது 2006 இல். 2015 இல் கூகிள் Alphabet Inc இன் அங்கமானபோது அதன் தலைவரானார் ப்ரின்.
கவலையின்றி தகவல் பிடிக்கும் வலையை நமக்குத் தந்தவர்கள் தற்போது அக்கறை காட்டுவது உலகை மேம்படுத்தும் வழிகளில். மாற்று எரிசக்தி, மாசற்ற கார், மாறுபடாத க்ளைமேட் என்று. Artificial Intelligence -இல் காரை இயக்கிக் காட்டியது 2010இல்.
உடற் பயிற்சி என்றால் ப்ரின்னுக்கு உயிர். காலேஜில் படிக்கையில் ‘ஏதும் அட்வான்ஸ்ட் கோர்ஸ் எடுத்திருக்கியா’ன்னு அப்பா கேட்டபோது, ‘ஆமா, அட்வான்ஸ்ட் ஸ்விம்மிங்!’ன்னு பதிலளித்தாராம்.
><><
(தகவல் நன்றி: Google)

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!