1941 இல் வந்த படம் அது. ஜூலியட்டை திருமணம் செய்துகொண்ட ரோட்னி. கல்யாணத்துக்கு வர முடியாத அவள் கஸின் லாராவின் ஊருக்கு ஹனிமூன் கிளம்புகிறான். அவனின் பழைய காதலி நண்பனுடன் வந்து அவனைக் காரில் அழைத்துச் சென்று பிளாக் மெயில் செய்கிறாள். பணம் தர மறுத்தவனை மண்டையில் தாக்க, கார் ஆக்ஸிடெண்ட் ஆக, ரோட்னிக்கு அம்னீசியா. தான் யாரென்றே தெரியவில்லை அவனுக்கு. பாக்கெட்டில் இருக்கும் லாராவின் அட்ரஸ் தான் ஒரே க்ளூ.
வேறு வழியின்றி அங்கே போகிறான். அவளோ இவனைப் பார்த்ததில்லை. தன் தோட்டத்தில் ஏதோ ஒரு வேலை போட்டுத் தருகிறாள். காதல் மலர்ந்து திருமணம் ஆகிறது. ஹனிமூனுக்கு, எஸ், நீங்க நினைக்கிற மாதிரியே, கஸின் ஜூலியட் ஊருக்கு போகிறார்கள். கார் ஆக்ஸிடெண்டில் இறந்துவிட்டான் என நினைத்திருந்த ஜூலியட் கோஷ்டி இவனைப் பார்த்து திகைக்கிறது. டாக்டர் கொடுத்த ட்ரீட்மெண்டில், யெஸ், நீங்க நினைக்கிற மாதிரியே, நினைவில் முதல் கல்யாண முன்னிரவுக்கு முன்போய்விடுகிறான்.
இப்போ லாராவுக்கு பிரச்சனை. நடந்ததெல்லாம் சொல்லி முத்தமிட்டு அவனை ப்ரஸண்ட் டென்ஸுக்குக் கொண்டு வருகிறாள். தன் காதல் இங்கேதான் என்றறிந்தவன் ஜூலியட்டுக்கு தன்னை 'இறந்தவனாகவே' காட்டி விட்டு அவளுடன் எஸ்கேப்!
'Kisses for Breakfast' என்ற அந்த பிரபல படத்தில் லாராவாக அசத்தியவர்... Jane Wyatt இன்று பிறந்த நாள்!
'One More River' -ல் என்டர் ஆனவர் Frank Capra வின் 'Lost Horizon' இல் சென்டர் ஆகி பிரபலம் ஆனார்.
அந்த டிவி சீரிஸ், 'Father Knows Best', புகழ் வாங்கித் தந்தது என்றால் 'Star Trek', மற்றொரு டிவி சீரிஸ், மிக அதிகமாக ரசிகர் கடிதம் பெற்றுத் தந்தது.
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!