Thursday, April 9, 2020

அழகிய மனம்...


எல்லையில் போராடி ரோமுக்கு வெற்றியைப் பெற்றுத் தலைநகர் திரும்புகிறான் தளபதி மேக்ஸிமஸ். உன்னை என் வாரிசாக்கப் போகிறேன் என்கிறார் மகன் மேல் நம்பிக்கையற்ற மன்னன் மார்க் அரேலியஸ். அறியவந்த மகன் கமோடஸ் இம்மீடியேட்டாக மன்னரைக் கொன்றுவிடுகிறான். அடிபணிய மறுத்த மேக்ஸிமஸின் மனைவி மகனையும் கொல்ல, துவண்டு விழும் மேக்ஸிமஸை அடிமை வியாபாரி பிடித்து கிளாடியேட்டராக விற்றுவிடுகிறான். விடுதலைக்கு ஒரே வழி களரியில் போராடி ஜெயிப்பதுதான். ஜெயித்து வந்தால் மன்னன் கமோடஸ் கையில் மறைத்த கத்தியுடன் நேருக்கு நேர் போராட அழைக்கிறான். அவனை கொன்று மீளும் மேக்ஸிமஸாக Gladiator இல் வரும் அவர் நடிப்பை வர்ணிக்க த்ரில்லிங் தான் ஒரே வார்த்தை. போர் காட்சியில் நிஜக் காயங்களுடன் நடித்தார், குதிரைகள் மரத்தில் உரசித் தள்ளியதால். பெற்றது ஆஸ்கார் அவார்ட்! 
Russell Crowe.. ஏப்ரல் 7. பிறந்த நாள்.
நேர் மாறாக 'A Beautiful Mind' படத்தில் அந்த ப்ரஃபசர் நாஷ். கணித மேதை. அற்புதமான தியரியைக் கண்டுபிடித்து அவார்ட் வாங்கும் நேரத்தில் அவரைக் குழப்பும் அவரின் கற்பனையில் எழுந்த பாத்திரங்கள்! தான் Paranoid Schizophrenia வில் அவதிப்படுவதை அறியாமல் தடுமாறுவதும், கடைசியில் தன் முயற்சியாலேயே அதிலிருந்து மீள்வதும்… A Beautiful Movie! கிடைத்திருக்கும் ஆஸ்கார். தட்டிக்கொண்டு போய்விட்டார் Denzel Washington (‘Training Day’).
மற்றொரு படத்தில் (L A Confidential.)போலீஸ் ஆபீசர் வேடம். உண்மைப் பாத்திரம் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர் என்றறிந்தவர் என்ன செய்தார்? லேசில் நுழைய முடியாத வாசல்களுள்ள மினி வீடெடுத்து கொஞ்ச நாள் தங்கினாராம். முடிந்து படப்பிடிப்புக்கு வரும்போது பாஹுபலி மாதிரி உணர்வுடன் வந்தார்.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!