Thursday, April 9, 2020

சிரிக்க சிரிக்க...

பாரிசிலிருந்து பிரஸல்சுக்கு ரயிலில் போகும் மில்லியன்களைச் சுருட்டத் திட்டமிடுகிறார் அதன் காவல் பொறுப்பில் இருக்கும் மேத்யூ. அதே பணத்தைக் குறிவைத்து நண்பனுடன் ரயில் ஊழியர் மாதிரி ஏறிக் கொள்ளும் ஆர்தர் அதைக் கொள்ளையடித்து வெளியே வீசினால், அது மிகச் சரியாக மேத்யூ அமர்த்திய ஆட்கள் நிற்கும் இடத்தில் விழுகிறது.  அவர்கள் கையிலிருந்து அது வழி மறித்துக் கைப்பற்றுகிறது போலீஸ் ..என்று சொல்லிக்கொண்ட மற்றொரு கொள்ளைக் கூட்டம். ஃபிரேமுக்கு ஃபிரேம் சிரிப்பும், காட்சிக்குக் காட்சி திருப்பமும்! 1969 -இல் வந்த ‘The Brain’ படத்தில் ஆர்தராக வந்து அசத்திய Jean Paul Belmondo -வை மறந்திருக்க முடியாது. பிரெஞ்சுப் படங்களின் டாப் ஸ்டார். ஹாலிவுட்டிலும் பிரபலம்.
Jean Paul Belmondo... இன்று பிறந்த நாள்.


நம் ஃபேவரிட் ஆன ஜாக்கி சானின் ஃபேவரிட் ஆன இவர் சண்டைக் காட்சிக்கு டூப் போட்டதில்லை. ஆன்டி ஹீரோ பாத்திரங்களை அழகாகச் செதுக்கிய இவர் தந்தை ஒரு சிற்பி.

சோஃபியா லாரனுடன் நடித்த ‘Two Women’ ஒரு சூபர்ஹிட் என்றால்  நம்ம ஊரிலும் நல்லா ஓடிய ‘That Man from Rio’ மற்றொன்று. Bond படங்களின் ஸ்பூஃப்! ஹாலிடே பாஸை வைத்துக்கொண்டு காதலியைப் பார்க்க வந்தால் அவளைக் கடத்திக் கொண்டு போயிருக்கிறது ஒரு கூட்டம். புதையல் ரகசியம் புதைந்து கிடக்கும்   சிலையை மியூசியத்தில் திருடி வைத்துக் கொண்டு, மற்றொரு சிலைக்காக அதை வைத்திருந்த அவளை! நம்ம ஹீரோ எப்படியோ அவளை மீட்டு, தப்பிப் பிழைக்கிறது வரை சிரிக்கலாம்.


2 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தகவல் பகிர்வு. இணையத்தில் கிடைத்தால் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது - The Brain படம்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஓ அறிந்தேன்... நன்றி...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!