Saturday, April 4, 2020

ஜோவாக, ஜோராக...


“Que Sera, Sera.. Whatever will be, will be..”
வீட்டில் பையனுடன் சேர்ந்து பாடகியான அம்மா ஜோ தினம் பாடும் பாட்டு அது. ஒருமுறை அப்பா பெஞ்சமினுடன் அவர்கள் வெளிநாடு சென்றபோது பையன் கடத்தப் பட்டு விடுகிறான். முயன்று அவன் இருக்கும் இடத்தை, ஊகித்தால் அது ஒரு தூதரகம். நேரே போய் சோதனையிட முடியாது. அங்கே நடக்கும் ஒரு பார்ட்டிக்கு அழைப்பை எப்படியோ வாங்குகிறார்கள். பார்ட்டியில் ஜோவைப் பாடச் சொல்லவே, அவள் அந்தப் பாடலைச் சத்தமாகப் பாட, கட்டிடத்தின் உள்ளே பையனுக்குக் காவலிருந்த பெண் பரிதாபப்பட்டு அனுமதிக்க, பையன் அடுத்த வரியை விசிலடிக்கிறான். பையனை மீட்டு, குற்றவாளியைப் பிடிக்கின்றனர்.

ஜோவாக, ஜோராக பாடி நடித்தவர் Doris Day! இன்று பிறந்த நாள்.

ஆர்வமில்லாமல் பாடிய பாட்டு அத்தனை மாபெரும் ஹிட்டாகும், ஆஸ்காரும் பெறும் என டோரிஸ் எதிர்பார்க்கவேயில்லை. தமிழிலும் வந்துவிட்டது. மறந்திருக்க மாட்டீர்கள்:
"சின்னப் பெண்ணான போதிலே.. அன்னையிடம் நான் ஒரு நாளிலே..
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா... அம்மா நீ சொல் என்றேன்..
வெண்ணிலா நிலா... என் கண்ணல்லவா கலா..." ('ஆரவல்லி')
(இந்த ஃபேமிலி ஸாங்க் கன்செப்டை வைத்து ஆயிரம் படங்கள் வந்துட்டது அப்புறம் இங்கே என்பது வேறு விஷயம்.)

1940. டான்ஸ் பயின்று காம்பெடிஷனில் வென்று ஹாலிவுட்டுக்கு மூட்டை கட்டும்போது முட்டுக் கட்டையாக அந்த ஆக்ஸிடெண்ட். போன கார் ரயிலில் மோத காலில் அடி. அப்புறம் இசை பயின்று பாடகி. ஸ்க்ரீன் டெஸ்டில் வென்று நடிகை. விரைவில் ஸ்டார். டாப் டென்னில் டென் டைம்ஸ் வந்தவர். (அதில் டாப் ஒன், நாலு முறை!) கிளார்க் கேபிளிலிருந்து ராக் ஹட்சன் வரை எல்லா பெரிய ஹீரோக்களுடனும் படங்கள்.

கடனை வைத்துவிட்டு இறந்து போன கணவர், டி.வி. சீரியல் ஒன்றுக்கும் இவரைக் கமிட் செய்துவிட்டிருந்தாராம். உடல் நிலையும் மன நிலையும் சரியில்லாத போதும் சமாளித்து அதைச் செய்ததில் சூபர்ஹிட் ஆனது அந்த 'The Doris Day Show.'

பிராணிகளின் ஃப்ரண்ட். வாழ்க்கையின் பிற்பகுதியை அவற்றின் நலனுக்காக செலவழித்தார். பொருத்தமாயிருக்காது என இவர் மறுத்த நாயகி ரோல் The Sound of Music.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வியக்க வைக்கும் தகவல்...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!