ஆளற்ற நெடுஞ்சாலையில் அந்த கார் விபத்து! தெறித்து விழுந்த திருடன் இறக்குமுன், சுற்றிக் கூடிய பதினொரு வாகனர்களிடம் தூரத்து பார்க் ஒன்றில் ஒரு பெரிய W -க்கு அடியில் தான் புதைத்துள்ள பெருந்தொகை பற்றிச் சொல்கிறான். "போய் எடுத்துக்குங்க!" எப்படிப் பங்கு வைப்பது? அவங்களுக்குள் தகராறு. ‘ஆல்ரைட்! முதல்ல கைப்பற்றறவங்களுக்குத்தான் எல்லாம்!’- முடிவாகிறது.
தொடங்குது ரேஸ்! சார்டர் பிளேன் வைப்பது முதல் சைக்கிள் வரை.. இடைஞ்சல்கள்! கலாட்டாக்கள்! சாம்பிளுக்கு ரெண்டு: குறுக்கு வழிதானே? தோ இருக்குன்னு அதில ஒருத்தருக்குக் காட்டின சிறுவன் ஆழக் குளத்தில் காரை இறங்கப் பண்ணி விட.... பூட்டின கடைக்குள் மாட்டிக் கொண்டு விட்ட ஒரு தம்பதி கடப்பாறையால் கதவைப் பிளக்க முயல...
(Spoiler ahead) சிக்கல்களைத் தாண்டி எல்லாரும் பார்க்கில் பார்க். ஆனால் அந்த பிக் டபிள்யூ? குறுக்கிணைந்த நாலு பால்ம் மரங்கள்தான் அதுன்னு கண்டுபிடித்து அடியில் தோண்டி, பங்கு பேசி, எடுத்து நிமிர்ந்தால் புன்னகைத்தபடி நிற்கிறார் போலீஸ் ஆபீசர் கல்பெபர்! கைப்பற்றிக் கொண்டு கிளம்பியவர் காரை விடுகிறார் தன் வீட்டுக்கு. துரத்தும் அவர்கள்! கட்டிட உச்சியிலிருந்து கீழே விழுந்து சிதறும் கரன்சி. எல்லாருமாக ஏறின ஏணி முறிந்து விழ ஆளாளுக்கு ஆஸ்பத்திரியில்! (‘It’s a Mad, Mad, Mad, Mad World.’)
...அந்த போலீஸ் ஆபீசராக அமைதியாக அழுத்தமாக நிற்பாரே அவர்தான்
SpencerTracy! மாபெரும் காரக்டர் ஆக்டர். இன்று பிறந்த நாள்!
ஆராலும் மறக்க முடியாத அந்த 'Guess Who’s Coming to Dinner?' இல் அற்புதமாக நடித்த அதே ஸ்பென்சர் ட்ரேசிதான்!
அடுத்தடுத்த வருடம் என்று ரெண்டு ஆஸ்கார் வாங்கியவர். 55 வருடத்துக்குப் பின் அப்படி வாங்கிய மற்ற ஒரே நபர் Tom Hanks மட்டுமே. 9 ஆஸ்கார் நாமினேஷன்! அதே சாதனை செய்தது Lawrence Olivier மட்டுமே. American Film Institute தேர்ந்தெடுத்த 50-இல், 9-வது மிகச் சிறந்த நடிகர் என்றால் சும்மாவா?
மெதட் ஆக்டிங்னா என்னன்னு கேட்பார்.. இயல்பான நடிப்புதான் இவர் மெதட். ஆனால் கொஞ்சம் அசந்தால் காணாமல் போய்விடுவார், கூட நடிக்கிறவர்.
2 comments:
நல்ல அறிமுகம்.
// 9-வது மிகச் சிறந்த நடிகர் //
தலைப்பும் நேற்றைய ஞாபகம் வந்தது... (!)
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!