Showing posts with label திரைத் துளிகள். Show all posts
Showing posts with label திரைத் துளிகள். Show all posts

Thursday, November 6, 2025

காட்சி என்றால் காட்சி...


'தெரியுமா அரசே உங்களுக்கு? ரொம்ப நல்லாவே பாடுகிறான் கம்பர் மகன், காதலை,' என்று வம்பிழுக்கிறார் ஒட்டக்கூத்தர் (நம்பியார்)...
அரசரும் கம்பரும் அம்பிகாபதி(சிவாஜி)யும் அமர்ந்திருக்கையில்!
அப்போது இளவரசி அமராவதி (பானுமதி) மெல்லப் படியிறங்கி வருகிறாள் அடியெடுத்து.
தன்னை மறந்து பாடி விடுகிறான் அம்பிகாபதி! "இட்ட அடி நோவ.. எடுத்த அடி கொப்புளிக்க… வட்டில் சுமந்து மருங்கசைய.."
அரசர் கோபமுற நோக்க, பதறிய கம்பர் தொடர்ந்து ஒரு வரி பாடி அதைச் சமாளிக்கிறார். “...கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று… கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்.” வெளியே கொட்டிக் கிழங்கு விற்கும் முதியவளின் பாதங்கள், கொளுத்தும் வெயிலில் நோவதைத்தான் சொல்கிறான் தன் மகன் என்று.
"யாரங்கே? அழைத்து வா அந்த முதியவளை!" ஆணையிடுகிறார் சந்தேகம் அகலாத அரசர்.
'இருந்தால்தானே வருவதற்கு?' என நம்பியார் குதூகலிக்க, கம்பர் கலங்கி, கலைமகளை மனதில் துதிக்க...
நுழைகிறாள் அந்தப் பாட்டி, "அப்பா... என்னா வெய்யில்," என்கிறாள், தலையிலிருந்து கொட்டிக் கிழங்குப் பெட்டியை இறக்கியபடி.
காப்பாற்றி விடுகிறாள் சரஸ்வதி!
நம்பும் மன்னர்... வெம்பும் நம்பியார்...
'அம்பிகாபதி' படத்தின் அற்புதமான காட்சி.
இயக்குநர் ப. நீலகண்டனின் ஷாட் அமைப்பைக் கவனியுங்கள். மிகக் குறைந்த ஷாட்களில் அந்த செக்வன்ஸையும் அத்தனை எக்ஸ்ப்ரஷன்களையும் அழகாகக் capture செய்திருக்கும் நுணுக்கம்!
காட்சி youtube இல் காணக் கிடைக்கிறது.

Saturday, September 13, 2025

திரைக்கதைக்கு பாடம்...

 "வாழ்க்கையில ரசனை ரொம்ப முக்கியம். ரசிக்கத் தெரிஞ்சவங்கதான் உலகத்தினுடைய அழகை பூரணமா அனுபவிக்க முடியும். நல்லா இருக்குன்னு சொல்றோம் பார்த்தீங்களா அந்த வார்த்தையே ரசனையிலேர்ந்துதான் உற்பத்தி ஆகுது," என்கிறார் சிவாஜி கப்பலில் அறிமுகமான பெண்ணிடம். அவள் ரசித்துக் கொண்டிருப்பது தன் வாழ்க்கையை என்பது அறியாமல்...

‘புதிய பறவை’.... இன்று பிறந்தநாள்! Technical Brilliance- க்கு ஒரு படம்! An 'ever-new' movie!
மனைவியை இழந்த கோபால் மறுபடி முகிழ்த்த காதலில் மனம் தேறி, லதாவை வாழ்வில் இணைக்க நிச்சயதார்த்தம் நடக்கையில் 'அத்தான்!' என்று அவன் முன் வந்து நிற்கிறாள் முதல் மனைவி. இடைவேளை! The best ever interval block!
Shot by shot, scene by scene நுணுக்கங்களை அடுக்கி, திரைக்கதைக்கு பாடம் சொல்லும் படங்களில் ஒன்று. டைடில் சீனிலிருந்தே சுறுசுறுப்பாக அதிகரிக்கும் விறுவிறுப்பு சூபர் க்ளைமாக்ஸில் முடியும்! Breathtaking suspense என்பார்களே, அது!
ஒவ்வொரு காட்சியையும் சிற்பமாகச் செதுக்கி எடுத்திருப்பார்கள். எந்த ஒரு வசனமும் படத்தின் கதையோடு இம்மி பிசகாமல் ஒன்றியிருப்பது இறுதியில் விளங்கும்போது ஏற்படும் வியப்பு!
விஸ்வநாதன் ராமமூர்த்தி தங்கள் பி. ஜி. எம்.மில் சிகரம் தொட்ட படம் இதுதான் என்பேன். scintillating! சிவாஜியின் ஊட்டி பங்களாவுக்குள் கார் நுழையும் அந்த சீனில் ஒன்றேகால் நிமிடத்துக்கு வரும் ஒய்யார பிஜிஎம் இல் இருந்து... ரயில்வே கேட் மூடிவிடும்போது சுழன்று சுழன்றொலிக்கும் வயலின் பின்னல்.... முதல் இரவில் குடித்துவிட்டு வரும் சௌகாரைக் கண்டு சிவாஜி மனம் குமையும் போது ஒலிக்கும் ஹாண்டிங் பின்னணி இசை.... ‘நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது’ன்னு சரோஜா தேவி ஊடல் செய்யும்போது ஒலிக்கும் மிக மிக மெல்லிய பிஜிஎம் வரை காட்சியின் உணர்வை காதுக்கு ஊட்டும் அவர்களின் மேதைமை! இன்றைக்குக் கவனித்தாலும் அசந்து விடும் அட்டகாச பங்களிப்பு!
சிவாஜியின் நடிப்புக்கு சவால்விட்டதில் சிகரம் இந்தக் கதை! வென்றது, வழக்கம்போல், அவரே.


Thursday, August 21, 2025

உச்சகட்ட ஸ்டைல்...


சிவாஜி நடித்ததிலேயே உச்சகட்ட ஸ்டைலாக இந்தக் காட்சியை கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.
"மந்த மாருதம் தவழும்..
சந்த்ரன் வானிலே திகழும்..
இந்த வேளையே இன்பமே,
ஏகாந்தமான இந்த வேளையே இன்பமே!"
(படம்: நானே ராஜா (1956)- ஶ்ரீரஞ்சனியைப் பார்த்து சிவாஜி போதையில் பாடும் seducing பாட்டு.) Link கீழே.
மெள்ள வலது பக்கம் திரும்பி காமிரா பேன் செய்ய அவர் போதையில் தள்ளாடியபடி 'லல்ல லாலலா..' என்று பாடியபடி வந்து நின்று 'ஹக்!' என்ற விக்கலுடன் தலையைச் சொடுக்கும் ஸ்டைல்! (அதையும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதத்தில்!)
நின்ற இடத்திலேயே கால்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்க, உடல் ஒய்யாரமாக வளைந்து ஒவ்வொரு திசையிலும் அரை அடி சாய்ந்து திரும்ப, ஒயினில் உடல் தள்ளாடுவதையும் ஒய்யாரமாக தனி பாணியில் செய்திருப்பார்.
உயர வேண்டிய நேரம் சரியான மில்லிமீட்டருக்கு உயரும் புருவங்கள்! அசைய வேண்டிய நேரம் அங்குல சுத்தமாக அசையும் கரங்கள்! படியிறங்கி வரும் paragon பாங்கு போனஸ்.
குடித்து விட்டு நாயகியை வளைத்துப் பாடுவதை எத்தனையோ ஹீரோக்கள், வில்லன்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் இப்படியொரு தத்ரூபம் (50%) + ஸ்டைல் (30%) + அழகு (20%) என்று ரைட் மிக்ஸில் கலந்த 'archive scene' நடிப்பை யாரும் கொடுத்ததில்லை என்பது பளிச்!
இனி பாடல்... மெல்லிய ஷெனாய் இசைத் துவக்கமே நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது. தபேலாவை அந்த உருட்டு உருட்டுகிறார் அதன் டாப் ரேஞ்சுக்கு! 'கருத்தைக் கொள்ளை கொண்டாய் வாழ்விலே..' என்ற இடத்தில் ரெண்டு செகண்ட் நிறுத்தி பேஸ் கிதாரை மென்மையாக அதிர விட்டு.. அடடா, யார் அந்த டி ஆர் ராம்நாத்? அற்புத இசை! என்னவொரு மெலடி! எல்லாவற்றுக்கும் மேலாக டி.எம்.எஸ்.சின் தெளிவான உச்சரிப்பும் தேனான குரலும்!
மெட்டுக்குப் பாட்டு எழுதுபவர் கவனத்துக்கு இந்த வரி! என்னவொரு match!:"பழுத்தமாம்ப...ழத்தைக்கண்டும்...பசித்தவன்காத்...திருப்பதில்லை..." மற்றொன்று: "கண் படைத்த பயனை நான் கண்டுகொண்டேன் உன்னால் தானே.."
நடிப்புக்கு ஒரு சிவாஜி என்றால் அவர் ஸ்டைலுக்கு ஒரு காட்சி இது!
><><

Sunday, August 10, 2025

காமிரா ஜாலம்...


ஒரு க்ரேன்; ஒரு ஜூம் லென்ஸ் இரண்டையும் வைத்துக்கொண்டு ஜாலம் பண்ணியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தம்பு.

முழுப்பாடலையும் ஒரே ஷாட்டில் படமாக்கி... ஒரு சாதனை.. 1962 -லேயே!
மாடியிலிருந்து கீழே ஜெமினிக்கு மெள்ள இறங்குவதும் அவர் மேலே வந்ததும் வலம் நகர்ந்து அவரை சரோஜாவிடம் அழைத்து வருவதுமாக காமிர பின்னுகிறது, என்னவொரு gliding movement!
படம்: ஆடிப்பெருக்கு. டைரக்டர் கே. சங்கர்.
பாடல்:
இதுதான் உலகமா...இதுதான் வாழ்க்கையா...
இதுவரையில் வாழ்க்கை காணாற்று வெள்ளமா?
(இசை ஏ எம் ராஜா)
மாடியில் சரோஜா தேவி சோகமாய்ப் பாட, கீழிருந்து கேட்டு மேலே வரும் ஜெமினி. காமிரா மேலே பேன் செய்கிறது, லாங்க் ஷாட்டிலிருந்து குளோஸப்பிற்கு ஜூம் இன் ஆகிறது, கீழே இறங்குகிறது, மறுபடி மேலே வருகிறது...
முழுப் பாடலையும் ட்யூனோடு நினைவு வைத்து 100% sink உடன் முகபாவங்களில் ஆழம் தவறாமல் நடித்த சரோஜா தேவிக்கும் கைநிறைய க்ளாப்ஸ்!