Saturday, August 29, 2026

வள்ளலாக வாழ்ந்தவர்...


மனசில எந்தக் கவலைதான் இருக்கட்டும், ஒரு மூணு நிமிட் கமிட் பண்ணி இதைக் கேட்டால், அப்புறம் அதைத் தேட வேண்டியிருக்கும்...
நினைத்தாலே சிரிப்பு வந்துவிடும்! சிரிப்பின் சிறப்பை சிரிப்பால் நிரப்பிச் சொல்லும் பாட்டு.
சங்கீத சிரிப்பு, சாகசச் சிரிப்பு என வகை வகையாய் சிரித்துக் காட்டி…
பாட்டு முடியும்போது நாமே சிரிப்பில் மாட்டிக் கொண்டு விடுவோம்.
ரிகார்டிங்கின்போது கூட இருந்தவர்கள் எப்படித்தான் சிரிக்காமல் இருந்தார்களோ?
"சிரிப்பு! அதன் சிறப்பை சீர் தூக்கிப்
பார்ப்பது நமது பொறுப்பு!"
...என்று தொடங்கும் அந்த என் எஸ் கிருஷ்ணன் பாடல் வந்தது சிவாஜி பத்மினி நடித்த 'ராஜா ராணி' படத்தில்.. சிரித்துக் கலக்கிவிடுவார் என். எஸ். கே!

கலைவாணர்! .. கடைசி வரை வள்ளலாகவே வாழ்ந்தவர்.

><><><

 

No comments: