51
அனல் காற்றை
ஊடுருவித்
தென்றல் பாய்ந்ததுபோல
என் இதயத்தை
உன் அன்பு.
52
உன்னைப் பற்றி
ஓர் ரகசியம்
உனக்கு சொல்வேன்
உன் மனம்
ரொம்பவே அழகு.
53
புதுப்புது அர்த்தம்
தரும்
ஒரு சொல்
நீ.
54
மில்லி மீட்டர்
உன் புன்னகை
விரிந்தால்
கிலோ மீட்டர்
எகிறுகிறது
என் மனம்.
55
மௌனமாக
மறுபடி ஒருமுறை
சிரியேன்,
உன் சிரிப்பின்
சங்கீதத்தைக் கேட்டு
ரசித்ததில்
பார்த்து மகிழும்
பாக்கியம் குறைந்துவிட்டது.
56
உன் பெயர்
உச்சரிக்கையில்
என் குரல்
என்னை ஏமாற்றுகிறது
மென்மையாகி.
57
சுழலும்
கண்கள்
இரு
கலங்கரை விளக்கம்.
><><><
(படம்- நன்றி: கூகிள்)
6 comments:
உன் பெயர்
உச்சரிக்கையில்
என் குரல்
என்னை ஏமாற்றுகிறது
மென்மையாகி. Super
புதுப்புது அர்த்தம்
தரும்
ஒரு சொல்
நீ.
Wow !
//புதுப்புது அர்த்தம் தரும் ஒரு சொல் நீ.
சுழலும் கண்கள் இரு கலங்கரை விளக்கம்.//
அவளை நான் மிகவும் ரஸித்தேன். :)))))
[அவளை = அவள்-8 ஐ]
anbulla jana
vanakkam. siriyavai enraalum sirappaanavai.
அனைத்துமே அருமை...
dear KBJ. No 66 excellent. best wishes. - chandrahari
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!