"இன்னும் நல்ல பண்ணுங்க," என்று மட்டுமே சொல்வாராம் டைரக்டர் வில்லியம் வைலர். ஆனா எப்படின்னு சொல்லமாட்டார். ரீடேக் எடுப்பதில் புகழ் பெற்றவர். டைரக்ஷனிலும்தான்! ‘பென்ஹர்' டைரக்டர் ஆயிற்றே?
இதனால் நடிகர்கள் பட்ட பாடு! ஹீரோ கிரிகரி பெக் தினம் அவரோடு சண்டைதான். அப்புறம் மூணு வருஷம் அவர் பக்கமே போகவில்லையாம் பெக்.
ஆனால் உருவானதோ ஒரு அருமையான கௌபாய் படம்!. ‘THE BIG COUNTRY' மிகச் சிறந்த 500 படங்களில் 187 ஆவதாக தேர்வானது.
இரண்டு கூட்டங்களுக்கிடையே பகை. அவர்களின் கால்நடைகளுக்கான தண்ணீர் தரும் நதிக்கரை ஒரு டீச்சருக்கு சொந்தம். அவளைப் பயமுறுத்தும் வில்லன். பாதுகாக்க விழையும் ஹீரோ என்று படிப்படியாக பில்ட் அப் ஆகும் திரைக்கதை... டுமீல் டுமீலிலிருந்து கௌபாய் படங்கள் கதைக்கு நகர வித்திட்ட படம்.
பேச்சில் அதிகம் காட்டாமல் பேசாத இடங்களில் கிரிகரி பெக் காட்டும் உணர்வு முக பாவனைகள் அலாதி.

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!