Saturday, September 22, 2012

மீட்சி



காற்றின் தூசு
மழையில் கரைந்து பின்
கண்ணில் தெரியும்
காட்சியே காட்சி!

மனதின் சுமைகள்
மழலையின் சிரிப்பில்
மறைந்து பின்
அகத்தில் எழும்
ஆட்சியே ஆட்சி!

வாழ்வின் துயர்களை 
வந்தவருடன் பங்கிட்டு
வகையாய் எதிர்கொண்டபின்
மனதில் உயர்
மாட்சியே மாட்சி!

<<>>


4 comments:

Rekha raghavan said...

காட்சி! ஆட்சி! மாட்சி! மொத்தத்தில் நெகிழ்ச்சி!

திண்டுக்கல் தனபாலன் said...

மூன்றுமே நல்ல சிந்தனை வரிகள்... அருமை...

Rekha raghavan said...

காட்சி,ஆட்சி,மாட்சி,மொத்தத்தில் நெகிழ்ச்சி!

ரேகா ராகவன்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை...